டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது.
அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்திருந்தது. இந்நிலையில் ட்விட்டர் #BanIPL என்ற ஹேஸ்டேக் தற்போது வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. அதில் பலரும் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தரும் முக்கியத்துவத்தை ஏன் இதற்கு தரவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் பலரும் ஏன் ஐபிஎல் தொடர் சிறப்பாக செயல்பட்டவர்கள் மட்டும்
வர்த்தக ரீதியில் ஐபிஎல் தொடர் சென்ற பிறகு அதன் முக்கியத்துவம் மிகவும் அதிகரித்துள்ளது. இதற்காக வீரர்களும் தங்களுடைய முழு அர்பணிப்பை தருகிறனர். ஒரு சில சமயங்களில் பலர் தங்களுடைய தேசிய அணிகளுக்கு இணையாக ஐபிஎல் அணிகளுக்கு முக்கியதுவம் தருகின்றனர் என்ற குற்றச்சாட்டை பலர் முன்வைக்கின்றனர். ஐபிஎல் தொடர் எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கடந்த முறை மற்றும் இம்முறை யுஏஇயில் தொடர் நடத்தப்பட்டத்தை வைத்து புரிந்து கொள்ளலாம்.
கொரோனா பாதிப்பு காலத்திலும் ஐபிஎல் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பிய போது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்படாமல் யுஏஇயில் நடத்தப்பட்டது. அதை ஒரு சிலர் வரவேற்ற நிலையில் மற்ற சிலர் விமர்சித்தனர். மேலும் டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்பு வரை ஐபிஎல் தொடர் நடைபெற்றது. இதனால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒரு குழுவாக சேர்ந்து இந்தத் தொடருக்கு தயாராக நேரம் குறைவானதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: டி20 போட்டியில் டெஸ்ட் மேட்ச் ஆடிய இந்தியா.. நியூசிலாந்திற்கு 111 ரன்கள் இலக்கு