ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை:


ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 23) நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான் அணி.


அன்று மேக்ஸ்வெல் கேட்சை விட்டவர்.. இன்று மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தினார்:


அடுத்தடுத்து ட்ராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ் உள்ளிட்டோர் விக்கெட்டுகளை இழந்தாலும் மேக்ஸ்வெல் மட்டும் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார். இவரது அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணி திணறிக்கொண்டிருந்த நிலையில் தான் அந்த சம்பவம் நடந்தது.


அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையின் போது மேக்ஸ்வெல்லின் கேட்சை தவறவிட்ட நூர், தான் இன்றைய போட்டியில் மேக்ஸ்வெல்க்கு கடினமான கேட்ச் பிடித்து விக்கெட்டை வீழ்த்தினார். மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தியது தான் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 






கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது மேக்ஸ்வெல் 201 ரன்களை ஒற்றை ஆளாக நின்று அடித்து ஆப்கானிஸ்தான் அணியின் உலகக் கோப்பை கனவை தகர்த்தது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் தான் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை இந்த டி20 உலகக் கோப்பையில் வீழ்த்திய குல்பாடின் நைப்பையும், அவரது கேட்ச்சையும் பிடித்த நூரையும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில் இந்த வெற்றி குறித்து குல்பாடின் நைப் பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மட்டும் அல்ல எனது ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு சிறந்த தருணம். இந்த வெற்றிக்காகத்தான் நாங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தோம். எங்கள் அணி முழுவதும் இந்த தருணத்திற்காக கடுமையாக உழைத்தோம். அது இன்றைக்கு நடந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்” என்று கூறினார்.


மேலும் படிக்க: AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!


 


மேலும் படிக்க: IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!