இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, குழு விளையாட்டான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர்கள் அணியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணியினர் அபாரமாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இறுதிப்போட்டியில் இன்று இந்தியா சிங்கப்பூர் அணியினருடன் மோதுகின்றனர். இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளில் இந்திய ஆடவர் அணியினர் நேர் செட் கணக்கிலே வெற்றி பெற்று அசத்தியதால் இந்த போட்டியிலும் இந்திய அணியினர் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியின் இரட்டையர் பிரிவில் தேசாய், ஞானசேகரன் சிறப்பாக ஆடி எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றனர். ஒற்றையர் பிரிவில் சரத்கமலும், ஞானசேகரனும் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்றைய போட்டியிலும் அவர்கள் தங்களது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வெல்வது உறுதியாகும்.
இந்திய அணி இதுவரை வாங்கிய 3 தங்கங்களும் தனிநபர் போட்டியில் மட்டுமே ஆடி கிடைத்தது ஆகும், இன்று டேபிள் டென்னிசில் இந்திய அணி பதக்கம் வாங்கினால் நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியா வாங்கும் நான்காவது தங்கம் ஆகும். குழு விளையாட்டில் நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியா வாங்கும் முதல் தங்கம் ஆகும்.
இந்த போட்டிக்கு முன்னதாக, வெள்ளிப்பதக்கத்திற்கான போட்டியில் இங்கிலாந்து அணியும், நைஜீரிய அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்தியாவுடன் நடைபெறும் இன்றைய போட்டி பதக்கத்திற்கான போட்டி என்பதால் சிங்கப்பூர் அணியினரும் பதக்கத்தை வெல்ல தீவிர முனைப்பு காட்டுவார்கள் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி.
மேலும் படிக்க : CWG 2022 Day 5 Schedule: காமன்வெல்த் போட்டியில் இன்று இந்தியாவிற்கு என்னென்ன போட்டிகள்..? களமிறங்கப் போவது யார்..?
மேலும் படிக்க : CWG Medal Tally 2022: அந்நிய நாடுகளை கதிகலங்க வைக்கும் இந்தியா.. பதக்க பட்டியலில் படாரென உயர்ந்து அசத்தல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்