இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்த நிலையில், டேபிள் டென்னிசில் இந்திய வீரர்கள் இன்று பதக்கங்களை குவிப்பதற்கான போட்டியில் களமிறங்குகின்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா களமிறங்குகிறார். இந்த போட்டி மதியம் 3.35 மணிக்கு தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியாவின் யாங்ஷி லியூவுடன் அவர் மோதுகிறார்.
டேபிள் டென்னிசில் குழுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் நட்சத்திரங்களான சரத்கமலும், ஞானசேகரன் சத்தியனும் இன்று ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் போட்டியில் களமிறங்குகின்றனர். இந்த போட்டி இன்று மாலை 6.15 மணிக்கு தொடங்க உள்ளது. இவர்கள் இங்கிலாந்தின் ட்ரிங்கால் பால் மற்றும் பிட்ச்போர்ட் லியாமுடன் மோதுகின்றனர்.
இந்த போட்டிக்கு பிறகு, ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான அரையிறுதியில் டேபிள் டென்னிசின் நட்சத்திரம் சரத்கமல் களமிறங்குகிறார். இந்த போட்டி இரவு 9.50 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் சரத்கமலுடன், இங்கிலாந்தின் ட்ரிங்கால் மோதுகின்றார்.
ஆண்களுக்கான மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஞானசேகரன் சத்தியன் களமிறங்குகிறார். இந்த போட்டி இரவு 10.40 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஞானசேகரனுடன், இங்கிலாந்தின் பிட்ச்போர்டு மோதுகின்றார்.
தங்கப்பதக்கத்திற்கான கலப்பு இரட்டையர் போட்டியின் போட்டியில் சரத்கமல் மற்றும் ஸ்ரீஜா அகுலா களமிறங்குகின்றனர். இந்த போட்டி இரவு 12.15 மணிக்கு நடைபெற உள்ளது. மலேசியாவின் சூங் ஜாவேன் /லைன் ஜோடியுடன் இந்தியாவின் சரத்கமல் மற்றும் ஸ்ரீஜா ஆகியோருடன் மோதுகின்றனர்.
மேலும் படிக்க : Pooja Gehlot CWG 2022: நீங்க மன்னிப்பு கேட்காதீங்க.. உங்கள நினைச்சு இந்தியா பெருமைபடுது... பூஜாவிற்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி!
மேலும் படிக்க : IND vs WI 4th T20I : ஆட முயற்சித்த வெஸ்ட் இண்டீஸ் அணியை ஓடவிட்ட இந்திய அணி... 59 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்