சென்னையைச் சேர்ந்த பிரனவ் வெங்கடேஷ் (Pranav Venkatesh), இந்தியாவின் 75ஆவது கிராண்ட்  மாஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.


சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2500 புள்ளிகளை கடந்து கிராண்ட்மாஸ்டர்களாக திகழும் 3 செஸ் வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்றால் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறலாம்.


 






அந்த 3 கிராண்ட்மாஸ்டர்களும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அன்தவகையில், 2500  புள்ளிகளை பெற்று இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் பிரணவ் வெங்கடேஷ். 


 






முன்னதாக 2014ஆம் ஆண்டு தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் சாம்பியன் ஆனார் பிரணவ் வெங்கடேஷ்.


தமிழ்நாடு செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் கூடாரமாக விளங்கும் நிலையில் தற்போது பிரணவ் வெங்கடேஷ் இந்த சாதனையைப் புரிந்துள்ளார். ஏற்கெனவே பூபேஷ், பிரக்யானந்தா போன்ற இளம் வீரர்கள் சாதனைபுரிந்துள்ள நிலையில், இவர்களின் வரிசையில் தற்போது இளம் வீரர் பிரணவ் வெங்கடேஷும் தற்போது சாதனை புரிந்துள்ளார்.


தமிழ்நாட்டிலிருந்து கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெறும் 27ஆவது வீரர் பிரணவ் வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்


Icecream Ad : ஐஸ்க்ரீம் விளம்பரத்தால் வந்த சர்ச்சை: இனிமே பெண்கள் விளம்பரத்துக்கு வேண்டாம்.. உத்தரவிட்ட அரசு..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண