இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகின்றனர். டேபிள் டென்னிஸ் ஆடவர் பிரிவில் இந்திய அணியினர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.




லீக் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணியினர் இன்று காலிறுதிப் போட்டியில் இந்தியா, வங்காளதேசத்தினருடன் மோதினர். இதில், முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவில் தேசாய மற்றும் ஞானசேகரன் வங்காளதேசத்தின் பாவ்ம் மற்றும் ரிட்டி ஆகிய இருவருடன் மோதினர். இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் வங்காளதேச வீரர்களால் ஆட்டத்தை அவர்கள் வசம் கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து, இந்திய வீரர்கள் 3-0 என்ற நேர் செட் கணக்கில் வென்றனர்.






இதையடுத்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவில் சரத்கமலும், ஷபீரும்  மோதினர். இந்த போட்டியில் சரத்கமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், அவர் ஷபீரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு போட்டியில் ஞானசேகரனும், ரிட்டியும் மோதினர்.  இந்த போட்டியிலும் இந்திய வீரரான ஞானசேகரன் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இதையடுத்து, இறுதியில் ஞானசேகரனும் 3-0 என்ற கணக்கில் வென்றார்.




இந்திய வீரர்கள் தேசாய், ஞானசேகரன், சரத்கமல் மற்றும் ஞானசேகரனும் சிறப்பாக ஆடியதால் இந்திய வீரர்கள் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 


மேலும் படிக்க : CWG Gold : காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இன்னொரு தங்கம்..! பளுதூக்குதலில் இந்திய வீரர் அசத்தல்..!


மேலும் படிக்க : CWG Medal Tally 2022: காமன்வெல்த்தில் தாறுமாறாய் ஓடும் தங்க பதக்கம்... முதலிடத்தில் இந்த நாடுதான்! அப்ப இந்தியா..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண