இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிகளவில் பதக்கம் வெல்வார்கள் என்பதால் ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் எதிர்பார்ப்பு நிலவியது.


இந்த நிலையில், இன்று 67 கிலோ எடை தூக்கும் பிரிவில் பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் 19 வயதான ஜெர்மி லால்ரினுங்கா என்ற இளவயது வீரர் பங்கேற்றார். ஜெர்மிலால் ரினுங்கா போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தினார்.






 


போட்டி தொடங்கியது முதலே இந்திய வீரர் லால்ரினுங்காவிற்கும், சமோவா நாட்டின் வீரருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனாலும், இந்திய வீரர் ஜெரிமி ஆதிக்கம் செலுத்தினார். இதனால், தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கான இரண்டாவது தங்கத்தை வென்று அசத்தினார்.






முதல் சுற்றான 140 கிலோவில் முதலில் 136 கிலோவையும், இரண்டாவது 140 கிலோவையும் தூக்கினார். மூன்றாவது வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும், அந்த சுற்றி்ல் அதிகபட்சமாக மொத்தம் 140 கிலோகிராம் தூக்கி முதலிடம் பிடித்தார். அடுத்த சுற்றில் 154 கிலோவையும், 160 கிலோவையும் தூக்கி மூன்றாவது வாய்ப்பை தவறவிட்டார். அந்த சுற்றில் அதிகபட்சமாக 160 கிலோ எடையை தூக்கினார். ஆனால், இரண்டாவது சுற்றில் சமாவோ நாட்டு வீரர் 166 கிலோ தூக்கினார்.


இருப்பினும் மொத்தம் நடைபெற்ற இரண்டு சுற்றுகளிலும் இந்திய வீரர் லால்ரினுங்கா 140 கிலோ, 160 கிலோவையும் தூக்கி 300 கிலோ எடை தூக்கி அசத்தி தங்கத்தை வென்று சாதனை படைத்தார். சமாவோ நாட்டு வீரர் வாய்பவா நேவா இவானே 127 கிலோ, 166 கிலோ எடை என 293 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார். நைஜீரிய வீரர் 290 கிலோ எடையைத் தூக்கி வெண்கலம் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற டீன் ஏஜ் வீரரான ஜெரிமி லால்ரினுங்காவிற்கு நாட்டு தலைவர்களும் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடப்பு காமன்வெல்த்தில் இந்தியா வெல்லும் 5வது பதக்கம் இதுவாகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண