Commonwealth Games 2022 Medal Table: 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு நேற்றைய இரண்டாம் நாள் சிறப்பானதாக அமைந்தது. நேற்றைய நாளில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் மீராபாய் சானு மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தார். மேலும், ஆண்களுக்கான 55 கிலோ பிரிவில் சங்கேத் சர்கார் வெள்ளியும், ஆடவருக்கான 61 கிலோ எடைப் பிரிவில் குருராஜா பூஜாரி வெண்கலமும் வென்றனர்.
குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், ஏரைன் நிக்கல்சனுக்கு எதிராக ஏகமனதாக முடிவெடுத்து 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்திய டேபிள் டென்னிஸ் மலேசியாவிடம் மோதிய போதிலும், மகளிர் ஹாக்கி அணி வேல்ஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வலுவான நிலைக்கு சென்றது. அதேபோல், மகளிர் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி பிந்த்யாராணி தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியின் 2வது நாள் முடிவில் பதக்க பட்டியலில் முதலிடத்தில் எந்த நாடு உள்ளது..? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ? என்பதை கீழே காணலாம்.
ரேங் | நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | ஆஸ்திரேலியா | 13 | 8 | 11 | 32 |
2 | நியூசிலாந்து | 7 | 4 | 2 | 13 |
3 | இங்கிலாந்து | 5 | 12 | 4 | 21 |
4 | கனடா | 3 | 3 | 5 | 11 |
5 | ஸ்காட்லாந்து | 2 | 4 | 6 | 12 |
6 | மலேசியா | 2 | 0 | 1 | 3 |
7 | தென்னாப்பிரிக்கா | 2 | 2 | ||
8 | இந்தியா | 1 | 2 | 1 | 4 |
9 | பெர்முடா | 1 | 1 | ||
10 | நைஜீரியா | 1 | 1 |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்