இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய வீராங்கனைகள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிகளில் பங்கேற்கின்னர்.


முன்னதாக, நடைபெற்ற சுற்றுப் போட்டிகளில் அபார வெற்றியைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். முன்னதாக, ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியாவின் நட்சத்திரமான பிரனதி நாயக் மகளிர் ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறார். இந்த போட்டி மாலை 6.40 மணிக்கு நடைபெற உள்ளது.





அதேபோல, இந்தியாவின் மற்றொரு ஜிம்னாஸ்டிக் நட்சத்திரமான ருதுஜா நடராஜ் இறுதிப்போட்டியில் பங்கேற்கிறார். இதுமட்டுமின்றி, சைக்கிளிங் போட்டியில் 10 கிலோமீட்டர் ஸ்க்ராட்ச் பிரிவு ரேசில் இந்தியாவின் சார்பில் இறுதிப்போட்டியில் மீனாட்சி களமிறங்குகிறார். இந்திய மங்கைகளான இவர்கள் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தங்க மங்கைகளாக வலம் வர ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






இவர்கள் மட்டுமின்றி லாவ்ன் பவுல்ஸ் விளையாட்டில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதுமட்டுமின்றி, மாலை சைக்கிளிங் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் சுஷிகலா ஆகாஷே, திரியஷா பால் ஆகியோர் களமிறங்குகின்றனர்.




இந்த காம்ன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்காக ஏற்கனவே மீராபாய் சானு பதக்கம் வென்ற நிலையில் இன்னும் சில வீராங்கனைகள் பதக்கம் லெவ்வார்கள் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.  


பிரனதி நாயக்குடன் இன்றைய இறுதிப்போட்டியில் கனடாவின் டெனோமி, ஸ்காட்லாந்தில் கென்னடி, தென்னாப்பிரிக்காவின் டேரிஸ், கனடாவின் ஸ்பென்ஸ், ஆஸ்திரேலியாவின்  காட்வின், ஒயிட்ஹெட் மற்றும் ஸ்காட்லாந்தின் ஆர்ச்சர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


மேலும் படிக்க : Mens Hockey IND vs ENG: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..? இங்கிலாந்துடன் இன்று மோதல்..!


மேலும் படிக்க : CWG 2022 Day 4 LIVE: ஸ்ரீஹரி, பிரனிதி இன்று பதக்கம் வெல்வார்களா..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண