வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் செய்யும் குறும்பு வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு நீங்கள் பார்க்கும் வீடியோ சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஏனென்றால் 20 வயதான பூனை ஒன்று தொய்வில்லாமல் படிக்கட்டுகளில் அழகாக இறங்கி வருகிறது. இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா ? ஒரு பூனையின் சராசரி ஆயுட்காலம் 15 வயது முதல் 18 வயது வரையில்தான். ஆனால் வீடியோவில் நீங்கள் பார்க்கும் பூனைக்கோ வயது 20 ! முற்றிலும் வயதான பூனை. ஆனால் எந்தவொரு உதவியும் இல்லாமல் படிக்கட்டுகளில் இறங்கி வருவது ஆச்சர்யம்தானே!


வீடியோ :






 


இதே போல மற்றுமொரு பூனை கோபத்தில் இருக்கும் பொழுது மனிதர்கள் எந்த மாதிரியான முக பாவனைகளை கொடுப்பார்களோ அப்படியாக முகத்தை வைத்திருக்கிறது. சிலர் இந்த பூனையை பார்க்கும் பொழுது மனித முகம் போலவே இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். உண்மையில் அப்படியாக இருக்கிறதா என்பதை உங்கள் கணிப்பிற்கே விடுகிறோம் ! 


வீடியோ :






 


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண