பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டித் தொடரில் இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மிகவும் பழமையான பாரம்பரியத்தை கொண்ட இந்திய ஹாக்கி அணி இன்று மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.


இந்திய ஹாக்கி அணி அசுர பலத்துடன் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் கானா அணியை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி மற்ற அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் அனைத்து வீரர்களும் துடிப்புடன் ஆடி வருகின்றனர். நேற்றைய போட்டியில் ஹர்மன்பிரீத்சிங் மட்டும் 3 கோல்களை விளாசினார். அவருககு கேப்டன் மன்ப்ரீத்சிங் அசத்தலான ஒத்துழைப்பை அளித்து வருகிறார்.




இந்தியாவிற்கு எதிராக இன்று களமிறங்கும் இங்கிலாந்து அணியும் பலமான அணியாகவே கருதப்படுகிறது, குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளிலே இந்தியாவிற்கு மிகவும் நெருக்கடி அணியாக இங்கிலாந்து உள்ளது.






இந்திய அணியில் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், கேப்டன் மன்ப்ரீத்சிங், துணை கேப்டன் ஹர்மன்ப்ரீத்சிங் ஆகியோருடன் அமித்ரோகிதாஸ், சுரேந்தர்குமார், வருண்குமார், ஹர்திக்சிங், ஷாம்ஷெர்சிங், ஆகாஷ்தீப்சிங், அபிஷேக் மற்றும் லலித்குமார் ஆகியோர் களமிறங்க உள்ளனர். இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என்று ஆவலுடன் உள்ளது.





இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென், சோனி லைவ் ப்ளாக்கில் நேரடியாக காணலாம்.


மேலும் படிக்க : CWG 2022 Day 4 Schedule: காமன்வெல்த் போட்டிகளில் இன்று களமிறங்க உள்ள வீரர் வீராங்கனைகள் யார் யார்?


மேலும் படிக்க : CWG 2022: ஒரே நாளில் இரண்டு தங்கம்... டேபிள் டென்னிஸ்,பேட்மிண்டன் வெற்றி - காமன்வெல்த் 3வது நாளின் முக்கிய முடிவுகள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண