ஆர்.ஆர்.ஆர் :


உலக சினிமா வியக்கும் வகையில் பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்தை எடுத்தவர் இயக்குநர் ராஜமௌலி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து டோலிவுட் சூப்பர் ஸ்டார்ஸான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சூப்பர் ஹிட் ஹிஸ்டாரிக்கல் படமான ஆர்.ஆர்.ஆர் படத்தை வெளியிட்டிருந்தார். படம் 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதில் சந்தேகமில்லை. 






நெட்ஃபிளிக்ஸ் மீது கோபப்பட்ட ராஜமௌலி :


சமீபத்தில் தனுஷ் மற்றும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் நடிப்பில்  நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் தி கிரே மேன். இந்த படத்தின் இயக்குநர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸ் மற்றும் ராஜமௌலி இருவருக்குமான கலந்துரையாடல்களை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துக்கொண்டு பேசிய ராஜமௌலி  நெட்ஃபிளிக்ஸ் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இந்தி பதிப்பை மட்டுமே வாங்கியதாக கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் “ முதலில் நான் நெட்ஃபிளிக்ஸ் மீது கோபமாக இருக்கிறேன். இது குறித்து நான் அவர்களிடமே புகாரும் அளித்திருக்கிறேன். நெட்ஃபிளிக்ஸ் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இந்தி பதிப்பை மட்டுமே ஓடிடியில் வெளியிட்டது. மற்ற நான்கு மொழிகளை ஸ்டிரீமிங் செய்ய விரும்பவில்லை. அது எனக்கு கோவத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் வெளியிடப்பட்ட  இந்தி பதிப்பிற்கு மேற்கத்திய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்ததையும் பார்க்க முடிந்தது.என் படங்கள் மேற்கத்திய நாடுகளை ஈர்க்கும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நல்ல கதை எல்லோருக்குமான நல்ல படம்தான் . ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான வரவேற்பு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அது நெட்ஃபிளிக்ஸால்தான் சாத்தியமானது” என தெரிவித்துள்ளார்.



ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்தி மொழியில் மட்டும் ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியானது தென்னிந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண