தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது சீசன் நேற்று நடந்து முடிந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ரசிகர்கள் இல்லாமல் நடந்து முடிந்த இந்த தொடரில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சாம்பியனாது.


சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ், ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழனஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சியாச்சம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய 8 அணிகள் இந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்றன.


ஜூலை 19-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு ப்ரீமிய லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறாத நிலையில், 2019 சீசனில் திருச்சி அணி ஏழாவது இடத்தில் நிறைவு செய்தது. திருச்சி அணி எதிர்த்து விளையாடிய நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அடுத்தடுத்த சீசனில் சாம்பியனானது மட்டுமின்றி மூன்றாவது முறையாக சாம்பியனாகி தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக பதிவு செய்துள்ளது. 


Muhammad Ali Grandson: அறிமுக போட்டியிலேயே அடித்து துவம்சம் செய்த முகமது அலியின் பேரன்!






இந்த ஆண்டு நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்ததால், குவாலிஃபையர் போட்டியில், திருச்சி, சேப்பாக் அணிகள் மோதின. இந்த போட்டியில், சேப்பாக் அணியை வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது திருச்சி அணி. இந்நிலையில், குவாலிஃபையர் 2 என மற்றுமொரு வாய்ப்பு கிடைத்தபோது, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்த்து சேப்பாக் அணி போட்டியிட்டது.  


இந்த போட்டியில், வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சேப்பாக் அணி. இதனால், டி.என்.பி.எல் தொடரின் ஐந்து பதிப்பில் 2016, 2017, 2019, 2021 என நான்கு முறை சேப்பாக் அணி இறுதிப்போட்டிக்கு முன்னாறி அசத்தியது. 






நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசன் அசத்தனலான ஓப்பனிங் கொடுத்தார். 2 சிக்சர்கள், 7 பவுண்டர்கள் என 58 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த அவர், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மற்ற பேட்ஸ்மேன்கள் சுமாராக ஸ்கோர் செய்யவே, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.


அதனை தொடர்ந்து சேஸிங் களமிறங்கிய திருச்சி அணிக்கு, ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாத்விக் 36 ரன்கள் எடுத்து தர, மற்ற பேட்ஸ்மேன்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சரவண குமார் மட்டும் அணியின் வெற்றிக்காக போராட, 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும், 20 ஓவர்கள் முடிவில்,  7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்த திருச்சி அணி, இலக்கை எட்ட முடியாமல் போட்டியை இழந்தது. 


இதனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி போட்டியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நாரயண் ஜெகதீசன் ஆட்ட நாயனாக தேர்வு செய்யப்பட்டார். 


INDVSENG : ஷூவால் பந்தை மிதித்த இங்கிலாந்து வீரர்கள்.. சேதப்படுத்த முயற்சியா? கொதிக்கும் இணையவாசிகள்!