இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று மேன்சஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்,  வீரர்களின் பாதுகாப்பு கருதி இன்று நடைபெற இருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.  போட்டி ரத்து செய்ததை ஐசிசி.,யை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகள் இணைந்து இந்த முடிவை எட்டியுள்ளதாக ஐசிசி அறிவித்தது. 


இந்நிலையில், செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தனியாக அழைத்து வர திட்டமிட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரவீந்திர ஜடேஜா,புஜாரா,ஷர்தல் தாகூர்,சாம் கரண்,மோயின் அலி ஆகியோர் தற்போது மான்செஸ்டரில் உள்ளனர். இவர்கள் அனைவரும் நாளைக்குள் துபாய்க்கு கொண்டு வர சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் அவர்களை அடுத்த 6 நாட்டுகளுக்கு தனிமைப்படுத்தி வைக்க உள்ளதாக அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். 






ஓரிரு தினங்களுக்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் லண்டனில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த சூழலில், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல், மற்றொரு பயிற்சியாளர் யோகேஷ் பர்மர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.


ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் சென்னை அணி தன்னுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின்னர் பெங்களூரு(செப்டம்பர் 24), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(செப்டம்பர் 26), சன்ரைசர்ஸ்(செப்டம்பர் 30), ராஜஸ்தான்(அக்டோபர் 2), டெல்லி(அக்டோபர் 4), பஞ்சாப் கிங்ஸ்(அக்டோபர் 7) ஆகிய போட்டிகளில் பங்கேற்க உள்ளது.  இதற்காக கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் யுஏஇயில் முகாம் இட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 






ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிக்கு நன்றாகவே அமைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேபோல் இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டு இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? -ஆப்கான் வீரர் ரஷீத்கான் விளக்கம்!