கிரிக்கெட் விளையாட்டில், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் இனிமேல் ‘பேட்ஸ்மேன் ‘என்ற சொல்லுக்கு பதிலாக ‘பேட்டர்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என எம்சிசி (மேரிலேபோன் கிரிக்கெட் க்ளப்) அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியிடம் இது குறித்து முறையான ஒப்புதல் பெற்றுள்ள எம்சிசி இனி பேட்டர் என்ற சொல்லை, வர்ணனைகளைளிலும், ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.  இதன் மூலம், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்குமான விளையாட்டாக கிரிக்கெட் எடுத்து கொள்ளப்படும் என எம்சிசி தெரிவித்துள்ளது.






இது குறித்து எம்சிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலின சமநிலை சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டு அனைவருக்குமானதாக இருக்கும். இன்க்ளூசிவ் என சொல்லப்படும் அனைவருக்குமான விளையாட்டாக கிரிக்கெட்டை கொண்டு செல்ல, இந்த முன்னெடுப்பு எடுக்கபப்ட்டுள்ளது. இதனையடுத்து பேட்ஸ்மேன் என்பதற்குப் பதிலாக பேட்டர் என்ற சொல்லை இனி பயன்படுத்துவோம். பயன்பாட்டில் உள்ள மற்ற சொற்களான பவுலர்கள், ஃபீல்டர்கள் என பொதுவான சொற்களாகவே உள்ளன. ஆனால், பேட்ஸ்மேன் என்னும் சொல்லில் ‘மேன்’ எனப்படுவது ஆண்களை மட்டும் குறிப்பதாக இருப்பதால், இந்த மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.


வேறு சொற்களில் இன்னும் மாற்றம் கொண்டுவரப்படவில்லை:






பேட்ஸ்மேன் என்ற சொல் பேட்டராக மாறியுள்ளதைப் போல, மற்ற கிரிக்கெட் பதங்களான ‘தர்ட் மேன்’, ‘நைட்வாட்ச்மேன்’, ‘12-த் மேன்’ போன்றவற்றில் எந்த மாற்றமும் செய்யவில்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஐசிசியிடம் அனுமதி பெற்று இந்த மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளதால், தற்போது பேட்ஸ்மேன் என்ற சொல் மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக எம்சிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆண்கள் கிரிக்கெட்டுக்கு நிகராக மகளிர் கிரிக்கெட்டும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், எம்சிசியின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆண்கள் கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் ஸ்பான்சர்களும், கவனமும், சம்பளமும் இன்னும் மகளிர் கிரிக்கெட்டில் பாதியை கூட எட்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. வெறு வார்த்தைகளால் மாற்றங்கள் கொண்டு வரும் கிரிக்கெட் அமைப்புகள், செயலில் இறங்கி மகளிர் கிரிக்கெட்டையும் கண்டு கொண்டால், விளையாட்டின் வளர்ச்சியை உலகம் பேசும். வெளிநாட்டில் ஓரளவு மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது, இந்தியாவில் இன்னும் எட்ட வேண்டிய இலக்கு மிக தூரம் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். 


இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:


வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?


கோயில் நிலத்தில் கிஷ்கிந்தா தீம் பார்க்?


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி


அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!


மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?


மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?