கிஷ்கிந்தா அமைந்துள்ள 177 ஏக்கர் நலமும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களிடம் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோயில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


திமுக அரசுப் பொறுப்பேற்ற பின் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர்பாபு இந்துசமய அறநிலையத்துறை சொத்துக்களை மீட்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பல இடங்களில் தனியார் பயன்பாட்டில் இருந்த கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தற்போது பிரபல தீம்பார்க் நிறுவனமான கிஷ்கிந்தா, கோயில் நிலத்தை பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சம்மந்தப்பட்ட நிலத்தை மீட்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 




சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில்  அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் சேகர் பாபு பேசியவை இதோ:


ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கை என 120 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மானிய கோரிக்கை வருவதற்குள் தற்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 50% முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அறிவிக்கப்பட்டதில் மொட்டைக்கு இல்லை கட்டணம் உள்ளிட்ட 5 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் லயோலா கல்லூரி அமைந்திருக்கும் இடம் எந்த திருக்கோயிலுக்கும் சொந்தமானது இல்லை என்று தெரிய வந்துள்ளது. 


கிஷ்கிந்தா இடம்  - ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் மூலம் உருவான நிலம். கிஷ்கிந்தா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலமும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் தான். இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களிடம் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோயில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 




இந்த ஆண்டிற்குள் 500 கோவில்களுக்கு திருப்பணிகள் செய்யப்படும். பயன்பாட்டில் இல்லாத நகைகளை ஒன்றிய அரசின் அலுவலகத்தின் ஒப்புதலோடு தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.


பலரும் கட்டணம் செலுத்தி குதூகலித்த கிஷ்கிந்தா கோயிலுக்கு சொந்தமான நிலம் என்பதை தற்போது அமைச்சரின் பேட்டி உறுதிபடுத்தியிருக்கிறது. 177 ஏக்கர் என்பது மிகப்பெரிய அளவிலான நிலம். அதை எப்படி ஒரு வர்த்தக நிறுவனம் பயன்படுத்தியது, அதற்கு அனுமதி அளித்தது யார்... இத்தனை ஆண்டுகளாக மக்களிடம் பணம் வசூலித்து லாபம் பார்த்த நிலையில், கோயில் நிர்வாகத்திற்கு சம்மந்தப்பட்ட நிறுவனம் செலுத்திய பணம் என்ன.... என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்த நிலையில், சட்டரீதியாக நிலத்தை மீட்போம் என அமைச்சர் கூறியிருப்பதால், இன்னும் சில நாட்களில் கிஷ்கிந்தா விவகாரம் பூதாகரம் ஆகலாம். 


இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:


வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி


அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!


மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?


மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?