நாளை நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஷகிப் அல் ஹசன் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட்:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நாளை செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
ஓய்வை அறிவித்த ஷகிப் அல் ஹசன்:
இந்த நிலையில் வங்கதேச அணியின் பேட்டிங் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் கடந்து 2007 ஆம் ஆண்டு அறிமுகமானார். அந்தவகையில், மொத்தம் 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 4600 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சை பொறுத்தவரை 242 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
இச்சூழல் தான் அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இவரது ஓய்வு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மிர்பூர் டெஸ்ட் தான் இவர் கடைசியாக விளையாடும் டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Shreyas Iyer:மும்பையில் அடுக்கு மாடி வீடு - ஸ்ரேயாஸ் ஐயரின் புதிய வீட்டின் விலை இத்தனை கோடியா?
மேலும் படிக்க: ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசை - சொதப்பிய விராட் கோலி, ரோஹித் ஷர்மா! பட்டியலில் எத்தனையாவது இடம்?