உலகின் சிறந்த பேட்டர்களில் ஒருவரான விராட் கோலி, இரண்டு இன்னிங்ஸிலும் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் விளைவாக, அவர் தரவரிசை பட்டியலில்  12 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.


ஐசிசி தரவரிசை பட்டியல்:


இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது. இச்சூழல், தனிப்பட்ட செயல்பாடுகள் டெஸ்ட் பேட்டர்களுக்கான சமீபத்திய ஐசிசி தரவரிசையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


பேட்டர்கள் பட்டியலில்  சரிவை சந்தித்த இந்திய ஜாம்பவான்கள்:


உலகின் சிறந்த பேட்டர்களில் ஒருவரான விராட் கோலி, இரண்டு இன்னிங்ஸிலும் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் விளைவாக, அவர் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் இருந்து வெளியேறி ஐந்து இடங்கள் வீழ்ச்சியடைந்து தற்போது 12 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இருப்பினும், டிசம்பர் 2022 க்குப் பிறகு தனது முதல் டெஸ்டில் விளையாடிய ரிஷப் பண்ட், ஒரு சிறப்பான சதத்தின் மூலம் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.


அந்த வகையில் அவர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்தார், இதன் மூலம் அவர் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி பட்டியலில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார். கோலியைப் போலவே, இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மாவும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் விளைவாக, ஐந்து இடங்கள் சரிந்து இப்போது 10 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் அனைத்து கால டெஸ்ட் ரன்களின் சாதனையையும் முறியடிப்பார் என்று கூறப்பட்ட சூழலில்  தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.


நியூசிலாந்து ஜோடி கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் நான்காவது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் பந்துவீச்சாளர்களில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து, பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.


பந்து வீச்சில் கலக்கும் அஸ்வின்:


டெஸ்ட் பந்துவீச்சாளர்களில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து, பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.


இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு வீரர் பாட் கம்மின்ஸ் நான்காவது இடத்தையும், தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் உயர்ந்து 6-வது இடத்தைப் பிடித்துள்ளார், ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.