இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:


 


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.


இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதியும்,  நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளதுஅதேபோல்தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தரம்ஷாலாவில் தொடங்குகிறதுஇச்சூழலில்கடைசி மூன்று தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் கே.எல்.ராகுலும் இடம்பெற்றார். ஆனால், உடற்தகுதியை கருத்தில் கொண்டு அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரியும் என்று பிசிசிஐ தெரிவித்தது.


ராகுலுக்கு பதிலாக களம் இறங்குவாரா சர்பராஸ் கான்?


 






இந்நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.  இச்சூழலில் தான் கே.எல்.ராகுலுக்கு பதிலாக ஏற்கனவே அணியில் இருந்த இந்திய அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் களமிறங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.  முன்னதாக கடந்த போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக இந்திய அணியின் மற்றொரு இளம்வீரரான ரஜத் படிதார் அறிமுகமானார்.


அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுக வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் விளையாடுவதற்கு போராடி வந்தார். இருப்பினும் முன்னணி வீரர்கள் அணியில்  இருந்ததால் புறக்கணிக்கப்பட்டு வந்த அவர் இந்த தொடரில் கே.எல்.ராகுல் காயத்தால்  விலகியதால் முதல் முறையாக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.


 


மேலும் படிக்க: India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்... இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!


 


மேலும் படிக்க: Watch Video: 7 -ம் நம்பர் ஜெர்சியை அணிந்தது ஏன்? தோனி கொடுத்த விளக்கம்! வைரல் வீடியோ!