ஓய்வை அறிவித்த திவாரி:
செளரப் திவாரி தன்னுடைய 11 வது வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். கடந்த 2006-2007 ல் ரஞ்சி டிராபி சீசன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.பின்னர் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் விளையாடினார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு விளையாடினார். இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக செளரப் திவாரி அறிவித்துள்ளார்.
கடினமான முடிவு:
இது தொடர்பாக அவர் பேசுகையில், “எனது பள்ளிப்படிப்புக்கு முன்பே நான் தொடங்கிய இந்தப் பயணத்தில் இருந்து விடைபெறுவது கொஞ்சம் கடினமானது. ஆனால், இதற்கு இதுவே சரியான நேரம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம தேசிய அணி மற்றும் ஐபிஎல்லில் இல்லை என்றால், ஒரு இளைஞருக்கு மாநில அளவில் ஒரு இடத்தைக் கொடுப்பதற்காக நாம் அந்த இடத்தைன் காலி செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். இளைஞர்கள் நிறைய வாய்ப்பு இருக்கிறது. டெஸ்ட் அணியில் வாய்ப்புகள் அதிகம் அதனால் இந்த முடிவை எடுக்கிறேன். எனது ஆட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இதை முடிவு செய்தேன்.
ரஞ்சி போட்டியிலும் கடந்த உள்நாட்டு சீசனிலும் எனது சாதனையை நீங்கள் பார்க்கலாம். நான் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்று எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், இப்போதைக்கு எனக்கு கிரிக்கெட் என்று ஒன்று மட்டுமே தெரியும். எனக்கு தெரிந்த ஒரே விஷயம் அதனால் நான் விளையாட்டில் எப்போதும் இணைந்திருப்பேன். அரசியலில் இருந்தும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆனால் நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
மும்பை அணியில் விளையாடினார்:
முன்னதாக செளரப் திவாரி இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 49 ரன்கள் எடுத்திருக்கிறார். அதேபோல், 17 ஆண்டுகளில் 115 முதல் தர போட்டிகளில் விளையாடி 189 இன்னிங்ஸ்களில் 22 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் உட்பட 47.51 சராசரியில் 8030 ரன்கள் குவித்திருக்கிறார். ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய போது 419 ரன்கள் எடுத்திருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்... இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!
மேலும் படிக்க: IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி...கே.எல்.ராகுல் விலகல்?