Asian Champions Hockey Final INDIA VS MALAYSIA LIVE: மலேசியாவை வீழ்த்தி 4வது கோப்பையை தட்டித்தூக்கிய இந்திய அணி
Asian Champions Hockey INDIA VS MALAYSIA LIVE: ஜப்பான் சௌத் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டியின் அப்டேட்டுகளை ஏபிபி தளத்தில் காணலாம்.
இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை. மேலும் தொடரை நடத்தும் ஒரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்திய அணி மலேசிய அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய அணி தனது 4வது கோலை அடித்து போட்டியில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
இந்திய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
மலேசிய அணிக்கு மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை இந்திய அணியினர் சிறப்பான முறையில் முறியடித்தனர்.
இறுதிப் போட்டியின் இறுதிச் சுற்று தொடங்கியது.
மூன்றாவது சுற்று முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்துள்ளது.
இந்திய அணி தனது மூன்றாவது கோலை அடித்து போட்டிக்குள் மீண்டும் தனது ஆதிக்கத்தை காட்டியுள்ளது.
இந்திய அணி தனது இரண்டாவது கோலை அடித்துள்ளது.
மலேசிய அணி வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்திய அணி தனக்கு கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பை வீணடித்து தொடர்ந்து பின்னடைவில் உள்ளது.
இந்திய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை மீண்டும் வீணாக்கியுள்ளது.
இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்துள்ளது.
உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் போட்டியின் மூன்றாவது சுற்று தொடங்கியது.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு இந்திய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
பாதி ஆட்டம் முடிந்த நிலையில் மலேசிய அணி 3 கோல்கள் அடித்து முன்னிலை வகிப்பதுடன் மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்தியா அணி ஒரு கோல் அடித்துள்ளது.
இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்று அதாவது பாதி ஆட்டம் முடிந்தது.
பெனால்டி கார்னர் வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி மலேசிய அணி கோல் அடித்துள்ளது.
மலேசிய அணிக்கு மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்துள்ளது.
மலேசிய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளது.
மலேசிய வீரர் ஒருவருக்கு கிரீன் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் போட்டியில் இருந்து 2 நிமிடங்கள் வெளியில் இருப்பார்.
மலேசிய வீரர் ஒருவருக்கு கிரீன் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் போட்டியில் இருந்து 2 நிமிடங்கள் வெளியில் இருப்பார்.
மலேசிய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி போட்டியில் முன்னிலை வகிக்கிறது.
மலேசிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்று தொடங்கியது.
முதல் சுற்று முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் உள்ளது.
இந்திய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை வீணடித்துள்ளது.
இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் மலேசிய அணி தனது கோலை அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்துள்ளது.
இந்திய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி போட்டியின் முதல் கோலை அடித்துள்ளது.
இந்திய அணிக்கு பலமான மலேசிய அணி கிட்டத்தட்ட தண்ணி காட்டிக்கொண்டுள்ளது.
மலேசிய அணி வீரர்கள் நிமிடத்திற்கு நிமிடம் மிகவும் தீவிரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போட்டி தொடங்கிய நொடியில் இருந்து மலேசிய அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி வருகின்றனர்.
இந்தியா மலேசியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி தொடங்கியது.
இந்தியா மற்றும் மலேசிய அணி வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஆகியோர் போட்டிக்கு முன்னதாக மரியாதை செலுத்தினர்.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை நேரில் காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராதாகிருஷ்ணன் மைதானத்திற்கு வந்துள்ளார்.
ஜப்பான் அணி சௌத் கொரியாவை வீழ்த்தி மூன்றாவது இடத்தை தனதாக்கியுள்ளது.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பான் அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஜப்பான் அணி தனக்கு கிடைத்த ஷூட்-அவுட் வாய்ப்பில் தனது 5வது கோலை சிறப்பாக அடித்து தனது வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
ஜப்பான் அணிக்கு ஷூட்-அவுட் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜப்பான் அணி தனக்கான 4வது கோலை மிகவும் பரபரப்பான சூழலில் அடித்துள்ளது.
ஜப்பான் மற்றும் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டியின் இறுதிச் சுற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிச் சுற்று தொடங்கியது.
மூன்றாவது சுற்று முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களுடன் சமநிலையில் உள்ளது.
ஜப்பான் அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை வீணடித்துள்ளது.
ஜப்பான் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கொரிய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது மூன்றாவது கோலை அடித்துள்ளது. இதனால் போட்டி மீண்டும் சமநிலைக்கு வந்துள்ளது.
கொரிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
ஜப்பான் கொரியா அணிகளுக்கான மூன்றாவது சுற்று தொடங்கியது.
மூன்றாவது சுற்று முடிவில் ஜப்பான் அணி 3 கோல்களும் சௌத் கொரியா அணி 2 கோல்களும் அடித்து முன்னிலை வகிக்கிறது.
ஜப்பான் அணி தனது மூன்றாவது கோலை அடித்து போட்டியில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது சுற்றின் மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஜப்பான் அணிக்கு எதிராக கொரியா அணி தனது இரண்டாவது கோலை அடித்து போட்டியை டிரா செய்துள்ளது.
ஜப்பான் அணியின் பெனால்டி கார்னர் வாய்ப்பை கொரிய அணி சிறப்பாக முறியடித்துள்ளது.
ஜப்பான் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜப்பான் அணி மிகவும் முயற்சி செய்து கோல் அடிப்பதை கொரிய வீரர் ஒருவர் காலால் தடுத்துள்ளார்.
பரபரப்பாக இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது.
முதல் சுற்று முடிவில் ஜப்பான் அணி 2 கோல்களும் சௌத் கொரியா அணி ஒரு கோலும் அடித்துள்ளது.
பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொரியா அணி தனது முதல் கோலை அடித்துள்ளது.
கொரிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜப்பான் அணிக்கு எதிராக சௌத் கொரியா அணி கோல் அடிக்க பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது.
ஜப்பான் அணி தனது மூன்றாவது கோலை அடிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளது.
போட்டியின் முதல் சுற்றிலேயே ஜப்பான் அணி 2 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்தியுள்ளது.
சாரல் மழை பெய்து வந்தாலும் ஜப்பான் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் அனல் பறந்து கொண்டுள்ளது.
முதல் ஐந்து நிமிடத்தில் ஜப்பான் அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஜப்பான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஜப்பான் அணி போட்டியின் முதல் கோலை பதிவு செய்து, முன்னிலை வகிக்கிறது.
லீக் போட்டியில் கொரிய அணி ஜப்பான் அணியை 2-1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது.
மூன்றாவது இடத்துக்கான போட்டி மழைக்கு மத்தியிலும் ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது.
ஜப்பான் கொரியா அணிகளுக்கு இடையில் இதுவரை 21 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் கொரியா அணி 17 முறை வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் மூன்றாவது இடத்துக்கான போட்டி ஜப்பான் மற்றும் சௌத் கொரியா அணிகளுக்கு இடையில் தொடங்கியது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 3வது இடத்துக்கான போட்டியில் சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி நாள் மற்றும் இறுதிப் போட்டியைக் காண மத்திய இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சென்னைக்கு வந்துள்ளார்.
இந்தியா மலேசியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக இந்திய ஹாக்கி தெரிவித்துள்ளது.
லீக் போட்டியில் இந்தியாவுடனான போட்டியில் மலேசியா 0-5 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது. இதனால் இந்த போட்டி மலேசிய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்.
இந்திய அணி இதுவரை 4 இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இந்திய அணி அனைத்து முறையும் பாகிஸ்தான் அணிக்கு எதிராகத்தான் விளையாடியுள்ளது. இம்முறைதான் முதல் முறையாக பாகிஸ்தான் அணி இல்லாமல் மலேசியா அணியுடன் மோதுகிறது.
இதுவரை இந்திய அணி 25 கோல்கள் அடித்துள்ளது. அதில் 20 கோல்கள் லீக் போட்டியில் அடிக்கப்பட்டவை. 5 கோல்கள் அரையிறுதியில் ஜப்பான் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டவை.
லீக் போட்டியில் இந்தியாவை வீழ்த்தினால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் அணியை அந்த போட்டியில் 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி, பாகிஸ்தான் அணியின் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கனவை சிதைத்தது.
லீக் போட்டியில் இந்தியா மலேசியா அணிகளுக்கு இடையிலான மோதலில் இந்திய அணி மலேசியாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
இந்தியா மலேசியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இந்திய அணி இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்தித்ததில்லை.
இந்தியா மலேசிய அணிகள் இந்த ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
Background
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின.
இந்த தொடரில் மிகவும் பலமான அணிகளாக கருதப்பட்டவை இந்தியா, பாகிஸ்தான், நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள்தான். சீனாவை பொறுத்தவரையில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் ஒரி வெற்றியைக் கூட பெறமுடியவில்லை. இந்திய அணியைப் பொறுத்தவரையில் இந்த தொடரில் இதுவரை அதாவது லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதிப் போட்டி என மொத்தம் இந்திய அணி களமிறங்கிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் டிராவும் அடைந்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணியிடம் தோல்வி அடையாத அணி என ஒன்று எதுவும் இல்லை. அதாவது இந்த தொடரில் களமிறங்கிய 5 அணிகளும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில், சீனாவை எதிர்கொண்டது. அதில் இந்திய அணி 7-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்த சீசனை மிகவும் பிரமாண்ட வெற்றியுடன் தொடங்கியது. அதேபோல் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 1-1 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. (ஜப்பான் அணியை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது) அதேபோல் இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்திய அணி தனது அடுத்த போட்டியில் சௌத் கொரியவை எதிர் கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து லீக் போட்டியில் கடைசி போட்டியாக இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. அந்த போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பெற்ற தோல்வியால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. பாகிஸ்தான் அணி இந்திய அணியை வென்றதால், ஜப்பான் அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் ஜப்பான் அணியை இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி இன்று அதாவது ஆகஸ்ட் 12ஆம் தேதி, இறுதிப் போட்டியில் பலமான மலேசியாவை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 20+5 என 25 கோல்கள் அடித்துள்ளது. இந்திய அணியை எதிர்த்து 5 கோல்கள் மட்டும்தான் அடிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியைப் பொறுத்தவரையில் மலேசிய அணி இந்த தொடரில் இந்திய அணியுடனான போட்டியில் மட்டும் தோல்வியைச் சந்தித்தால் இந்தியாவை வீழ்த்த பல்வேறு யுக்திகளுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -