இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி லார்ட்ஸ் மற்றும் ஓவல் மைதானங்களில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று அந்த நாட்டின் ஓல்ட் ட்ராபோர்டில் நடைபெற உள்ளது.


இந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் லண்டனிலே தனிமைப்படுத்தப்பட்டார். இந்த சூழலில், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல், மற்றொரு பயிற்சியாளர் யோகேஷ் பர்மர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.




இதையடுத்து, இந்திய அணி வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்ப ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆர்.டி. – பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் இந்திய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.


முன்னதாக, இந்திய பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணியை விலகிக்கொள்ளுமாறு இங்கிலாந்து வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்திய அணி அவ்வாறு விலகிக்கொண்ட பிறகு இந்த தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியதாக அறிவிக்கப்படும் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கூறியுள்ளது.




தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும்போது, இந்தியா விலகிக்கொண்டால் இந்த தொடரை இங்கிலாந்து கைப்பற்றியதாக அறிவிக்கப்படும் என்பதை கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆத்திரமடைந்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அனைவரும் இங்கிலாந்தின் விவாதத்தினால் கடும் கோபமடைந்துள்ளனர்.


மேலும், கேப்டன் விராட் கோலியும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் துணை கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியை நிச்சயம் கைவிட முடியாது. தாங்கள் விளையாடியே தீருவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். இந்த நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதனால், ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் இந்தியா தொடரை வெல்லுமா? அல்லது இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்யுமா? என்பதை தீர்மானிக்கும் 5வது டெஸ்ட் போட்டித் தொடர் இன்று திட்டமிட்டபடி மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டி சோனி லைவ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 


T20 WC, Indian Squad: மும்பை 6..டெல்லி 4...அப்போ.. சென்னை? டி-20 அணியில் இடம்பிடித்த ஐபிஎல் வீரர்கள் யார்?