இன்று விநாயகர் சதூர்த்தி. இந்துக்களால் முதல் முதற்கடவுள் என போற்றி வணங்கப்படும் விநாயகர் சதூர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதூர்த்தி கொண்டாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே வேளை அந்த தடையில்லாமல் இருந்திருந்தால் உங்கள் தெருக்களில் சில விநாயகர் பாடல்கள் நாள் முழுக்க ஒலித்துக் கொண்டே இருக்கும்.  அந்த பாடல்களின் தொகுப்பு இதோ... வீட்டில் இருங்கள்... விநாயகரை வணங்குங்கள்... பாதுகாப்பாய் பக்தியை பெறுங்கள்...!

Continues below advertisement


 


1.சாமி வருது.. சாமி வருது... வழியை விடுங்கடா...!


ன்னாடந்தான் காத்து மழை


அச்சுறுத்தும் ஆத்தங்கரை


முன்னாலதான் வீற்றிருக்கும் சாமி இவந்தான்


கண்ணாலந்தான் கட்டிக்கலை


பிள்ளை குட்டி பெத்துக்கலை


எல்லாருக்கும் காவல் நிற்கும் ஈசன் மகந்தான்


சின்னஞ்சிறு மூஞ்சூறு


மன்னவனின் பூந்தேரு


பூலோகம் கொண்டாடும் ஒத்த கொம்பந்தான்


செய்யும் தொழில் வாடாமல்


தங்கு தடை வாராமல்


நாம் வாழ காப்பாத்தும் ஆனை முகம்ந்தான்


கொண்டுங்கள் மேளம் தட்டுங்கள் தாளம்


வந்தது பொன்னாளு


நீ தும்பிக்கை மேலே நம்பிக்கை வைச்சா


எப்பவும் நன்னாளு


ஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா!



2.மஹாகணபதி மஹாகணபதி...!


அட ஏழுகுண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா
அட பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது
மஹாகணபதி மஹாகணபதி 


 



 


3.பிள்ளையார் பட்டி ஹீரோ நீதான்!


காதல் கவலைய
நீ தீர்த்து வச்சா கணேசா
கோவில் வாசல் வந்து
வெடிச்சிடுவேன் பட்டாச

யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா



4.வீர விநாயகா... வெற்றி விநாயகா...!


வீர விநாயகா வெற்றி
விநாயகா சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும்
வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட
வேனுமையா (2)

ஈசன் பெற்ற ஆசை
மகனே ஈடு இணையே இல்லா
துணையே நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும்



 


5.மஹா கணபதிம்...!


மஹா கணபதிம்… 
ஸ்ரீ மஹா கணபதிம்… 
ஸ்ரீ மஹா கணபதிம் மனசா ஸ்மராமி 
மஹா கணபதிம் மனசா ஸ்மராமி
மஹா கணபதிம் மனசா ஸ்மராமி 
மஹா கணபதிம் மனசா ஸ்மராமி 
வசிஷ்ட வாம தேவாதி வந்தித

மஹா கணபதிம் மனசா ஸ்மராமி 
வசிஷ்ட வாம தேவாதி வந்தித 
மஹா கணபதிம்… !