Vinayagar Chaturthi Pooja Procedure : இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி வரும் நடப்பாண்ட வரும் செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளும், விற்பனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எப்படி வணங்க வேண்டும்?
விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகரை எப்படி வணங்க வேண்டும் என்பதை கீழே விரிவாக காணலாம்.
- விநாயகர் சதர்த்திக்கு முந்தைய நாளே வீட்டை நன்றாக சுத்தம் செய்து வீட்டை கழுவ வேண்டும்.
- விநாயகர் சதுர்த்தி நன்னாளில் கடைகளில் வாங்கிய அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறைக்கு கொண்டு வர வேண்டும்.
- நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தியை மதியம் 1 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும். ( காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டமும் வருவதால் அந்த நேரத்தில் வழிபடாமல் இருப்பது நல்லது)
- பூஜை செய்வதற்கு ஏதுவாக விநாயகர் சிலைக்கு முன்பு வாழை இலையிட வேண்டும்.
- வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தை வைக்க வேண்டும்.
- பின்னர், விநாயகருக்கு பிடித்த உணவுகளான கொழுக்கட்டை, சுண்டல், பால், தயிர், தேன், அவல், பொறி, லட்டு போன்றவற்றை வைக்க வேண்டும். இவை அனைத்தும் வைக்க இயலாதவர்கள் கொழுக்கட்டை மற்றும் சுண்டல் வைத்தாலே போதும்.
- பின்னர், விளாம்பழம், மாதுளை, வாழைப்பழம், கொய்யாப்பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும்.
- விநாயகருக்கு மிகவும் உகந்த மாலையாக கருதப்படும் எருக்கம்பூவால் ஆன மாலையை அணிவிக்க வேண்டும்.
- விநாயகருக்கு உகந்த அருகம்புல்லை அவருக்கு சூட்டுவதும் சிறப்பானது ஆகும்.
- மாலை அணிவித்து, படையலிட்ட பின்பு தீபாராதனை காட்டி விநாயகரை வணங்க வேண்டும்.
முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகரை வணங்கினால் அனைத்து சங்கடங்களும் தீர்ந்து நன்மைகள் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். இதனால், விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மேலே கூறியவாறு விநாயகரை வணங்கலாம்.
கடைகளில் இருந்து வாங்கிய விநாயகரை வணங்கிய பிறகு, அந்த சிலையை கரைப்பதற்கு என்று குறிப்பிட்ட நாளில் நீர்நிலைகளில் விநாயகர் சிலையை கரைக்க வேண்டும்.
மேலும் படிக்க: Vinayagar Chaturthi 2024 Date: பக்தர்களே! நெருங்கி விட்டது விநாயகர் சதுர்த்தி! எப்போது? எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்?
மேலும் படிக்க: நெருங்கிடுச்சு விநாயகர் சதுர்த்தி... சுவையான பச்சைப்பட்டாணி பூரண கொழுக்கட்டை செய்வோம் வாங்க