இந்துக்களின் பண்டிகைளில் மிக மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது விநாயகர் சதர்த்தி. முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகர் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படடு வருகிறது.


விநாயகர் சதுர்த்தி:


ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியிலே விநாயகப் பெருமான் அவதரித்தாக புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாகவே ஆவணி மாதம் என்றாலே அது விநாயகருக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கு விநாயகர் சதுர்த்தி, கணேச சதுர்த்தி என்று பல பெயர்களும் உண்டு.  


விநாயகர் சதுர்த்தி எப்போது?


நடப்பாண்டிற்கான விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. சதுர்த்தி திதி வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி மதியம் 1.48 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் மதியம் 3.38 மணி வரை வருகிறது.


6ம் தேதியே சதுர்த்ததி திதி பிறந்தாலும் சூரிய உதயத்தின்போது இருக்கும் திதியே அன்றைய தினத்தில் கணக்கில் கொள்ளப்படும் அடுத்த தினமான செப்டம்பர் 7ம் தேதியே சதுர்த்ததி திதி கணக்கில் கொள்ளப்படும். இதனால், வரும் செப்டம்பர் 7ம் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.


விநாயகர் சதுர்த்தி கொண்டாட சிறந்த நேரம் எது?


செப்டம்பர் 7ம் தேதி வரும் விநாயகர் சதர்த்தி நன்னாளில் காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டமும் வருகிறது. இதனால், இந்த நேரம் தவிர்த்து மதியம் 1 மணிக்கு முன்னதாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை செய்யலாம்.


விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என்பதால் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கோவை, கன்னியாகுமரி, சென்னை போன்ற நகரங்களில் விநாயகர் சதுர்த்தி மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என்பதால் அங்கு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க கூடுதல் போலீசார் குவிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.