சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு காமாட்சி மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம். திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் 100 ஆண்டுகள்  பழமை வாய்ந்த அருள்மிகு காமாட்சி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு காலை பால் குடம் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.




உப்பனாற்றிலிருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், பால்காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்து  பக்தர்கள்  ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே வந்து கோயிலை அடைந்தனர். பின்னர், பக்தர்கள் எடுத்து வந்து பால் கொண்டு அம்பாளுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.


திருபஞ்சாக்கை காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா - திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து   வழிபாடு! 


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே திருபஞ்சாகையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இவ்வாலயத்தில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா  பந்தக்கால் முகூர்த்ததுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து வைகாசி திருவிழா முன்னிட்டு  விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், அலகு காவடி, பறவைக் காவடிகள், உடன் கரகம் புறப்பட்டு வாணவேடிக்கை மேளதாளம் முழங்க தோட்டம் அன்னப்பன்பேட்டை மெயின் ரோடு வழியாக கோயிலை வந்தடைந்தது. 




அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு செம்பனார்கோயில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு; ஜூன் 14-ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட் பெறலாம்- எப்படி?


மயிலாடுதுறை கூறைநாடு தாகம் தீர்த்த விநாயகர் கோயிலில் சம்வத்ஸராபிஷேகம்!


மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள தாகம் தீர்த்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சம்வத்ஸராபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தாகம் தீர்த்த விநாயகர் கோயிலில் கடந்த 2012-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 11 ஆண்டுகள் நிறைவுற்றதைத் அடுத்து சம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது. 


Takkar Movie Twitter Review: ஏகப்பட்ட ப்ரோமோஷன்கள்.. சித்தார்த் நடித்த ‘டக்கர்’ படம் எப்படி இருக்கு? ... ட்விட்டர் விமர்சனம் இதோ..!




இதையொட்டி விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவை விழாக் கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மயிலாடுதுறையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.


Disney+ Hotstar Cricket: காசே வேணாம், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இலவசமாக பார்க்கலாம்.. எப்படி? : ஹாட்ஸ்டார் அப்டேட்