Takkar Movie Twitter Review: நடிகர் சித்தார்த் நடித்துள்ள டக்கர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'டக்கர்’. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று வெளியானது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த் படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதன்படி, டக்கர் என்பது ஒரு கோபக்கார இளைஞனின் கதை. தான் பணக்காரனாக வேண்டும் என நினைத்து அதனை அடைய முடியாமல் அந்த கோபத்தை யார் மேல எப்படி எங்கு காட்ட வேண்டும் என தெரியாமல் இருக்கும் இளைஞனின் கதை. இது வழக்கமான கதையாக இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக சொல்லி இருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.
மேலும் ஜூன் 9 ஆம் தேதிக்குப் பின் எனக்கு ஹிட் காத்திருக்கிறது. ரசிகர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு அதை கொடுக்கும் இயக்குநராக கார்த்திக் உள்ளார் எனவும் புகழ்ந்து தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் படத்திற்கு வித்தியாசமாக பல ப்ரோமோஷன்கள் செய்யப்பட்டது.
இதனால் டக்கர் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் இரண்டை ஆண்டுகளுக்குப் பின் சித்தார்த் படம் வெளியாகியுள்ளது. டக்கர் படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Takkar Review: பணக்காரனாக நினைக்கும் ஹீரோ.. பாதை மாறும் பயணம்.. சித்தார்த் நடித்த டக்கர் படம் எப்படி? - முழு விமர்சனம் இதோ..!