மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ராதா நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆதி வைத்தியநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனம் முதல் குருமகா சன்னிதானம், வைத்தீஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்னர் அங்கிருந்த பழைய சிலைகளை ராதநல்லூரில் பிரதிஷ்டை செய்ததால் இவ்வூரில் உள்ள சுவாமி ஆதி வைத்தியநாத சுவாமி என அழைக்கப்படுகிறார். 




Instagram Outage : திடீரென முடங்கியதால் ஷாக்.. சரிசெய்து ட்வீட் செய்த இன்ஸ்டாகிராம்.. மீண்டும் மீண்டுமா?


இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா ஆறு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக  நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் அடுத்து நேற்று இரவு வள்ளி தெய்வானை சமேத செல்வ முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக திருக்கல்யாணத்துக்குரிய புனித சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு, மாங்கல்யதாரண்யம் செய்யப்பட்டது. பின்னர், சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. 


Gold Silver Price Today : சேமிப்புக்கு செம்ம ஸ்டார்ட்; விலை சரிந்த தங்கம்; எவ்வளவு தெரியுமா?




இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்தனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களிலும் சிவாலயங்களிலும் முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


Rambha car accident: குழந்தையுடன் பாடி மகிழ்ந்த ரம்பா வீடியோ... 24 மணி நேரத்திற்குள் நடந்த விபத்து...!