பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பல பயனர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை எதிர்கொண்ட பலர் தங்களது கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக நினைத்து புகார் கூறியுள்ளனர்.


இன்ஸ்டாகிராம் முடக்கம்


இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் முடங்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே சமீபத்தில் வாட்ஸ்அப் டவுன் என்று பலர் புகாளித்த நிலையில் நிலைமை உடனே சீர் செய்யப்பட்டது. அதே போல சர்வர்களில் ஏற்படும் சிக்கல்களால் இந்த பிரச்சனை பல ஆப்களுக்கு ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்கு முன்னறிவிப்பின்றி எந்த காரணமும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது என்று புகாரளிக்க தொடங்கினர். இதனை சரி செய்வதாக உறுதியளித்த இன்ஸ்டாகிராம், அதனை 7 மணி நேரத்தில் சரி செய்து ட்வீட் வெளியிட்டது.






சரி செய்யப்படும் எனக்கூறி ட்வீட்


இந்த பிரச்சனை தொடர்பாக, "இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் உங்களில் சிலருக்கு சிக்கல்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று இன்ஸ்டாகிராம் ட்வீட் செய்துள்ளது. அந்த பதிவிற்கு கீழும் பயனரகள் ஸ்க்ரீன்ஷாட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்: Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்த இஸ்ட் மறக்காம ஃபாலோ பண்ணுங்க..


பயனர்கள் புகார்


இன்ஸ்டாகிராமின் செய்தித் தொடர்பாளர் கணக்குகளை இடைநிறுத்துவது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. பல இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் இடைநிறுத்தப்பட்ட கணக்கை அணுக மீண்டும் முதலில் இருந்து மின்னஞ்சல் ஐடி மற்றும் தொலைபேசி எண்ணைக் கேட்பதாகவும், அதனை கொடுத்தாலும் உள்ளே செல்லவில்லை என்றும் ட்வீட் செய்திருந்தது.






மெட்டா பங்குகள் பாதிப்பு


இதனால் கிட்டத்தட்ட 3,000 பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், டவுன்டெக்டரின் செயலிழப்பு-கண்காணிப்பு வலைத்தளத்தில், பயனர்கள் சமர்ப்பித்த பிழைகள் உட்பட பல ஆதாரங்களின் நிலை அறிக்கைகளைத் தொகுத்துள்ளது. இந்த செயலிழப்பு அதிக எண்ணிக்கையிலான பயனர்களை பாதிக்கலாம் என்று அது குறிப்பிடுகிறது. பங்குச் சந்தைகளில் பரவலான விற்பனைக்கு மத்தியில் இன்ஸ்டாகிராம் டவுன் ஆனதால் மெட்டாவின் பங்குகள் கிட்டத்தட்ட 5% குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


சரி செய்து ட்வீட்


ஆனால் தற்போது இன்ஸ்டாகிராம் இந்த பிரச்னையை சரி செய்துள்ளது. "இந்த பிழையை நாங்கள் இப்போது தீர்த்துவிட்டோம். இது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் கணக்குகளை அணுகுவதில் சிக்கல்களை ஏற்படுத்தியது மற்றும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சிலருக்கு தவறாக காட்டியது. மன்னிக்கவும்!", என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது.