90களில் பிரபல நடிகையாக வலம் வந்த ரம்பா, அன்றைய காலகட்டத்தில் பலரின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி கதாபாத்திரங்களுடனும் நடித்த ரம்பா, 90களில் பெரும்பாலான படங்களை ஆக்கிரமித்தார். சினிமாவிற்கு பிறகும் டிவி நிகழ்ச்சிகளில் தன் பயணத்தை தொடர்ந்த ரம்பா, அதன் பின் இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தொழிலதிபரான தன் கணவருடன் கனடாவில் குடியேறி ரம்பா, அதன் பின் மூன்று குழந்தைகளுக்கு அன்னையானார். தன் குடும்பம், தன் குழந்தைகள் என தொடர்ந்து பிஸியாக இருந்த ரம்பா, அடிக்கடி இந்தியா வந்து, தன் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார், சினிமாத்துறை நண்பர்கள் அனைவரையும் சந்தித்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சமீபத்தில் கூட, நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்து, அவர் ஆழ்ந்த சோகத்தில் இருந்த சமயத்தில், தன் குழந்தைகளுடன் வந்த , மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததுடன், அவரை வெளியே அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தினார். நல்ல மனம் படைத்தவராக அறியப்படும் ரம்பா, இயல்பில் மிகவும் பாசமானவர். அதிலும் அவரது குழந்தைகள் என்றால் அவருக்கு அலாதி ப்ரியம்.
யார் கண் பட்டதோ, பள்ளி முடிந்து தன் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வரும் வேளையில், ரம்பாவின் கார் மீது மற்றொரு கார் மோதியது. இதில் அவரது குழந்தைகள் மற்றும் ரம்பா உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். ரம்பா உள்ளிட்டோர் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், இளம் குழந்தையான சாஷா மட்டும் படுகாயம் அடைந்ததார். அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு தான், அதாவது அந்த குழந்தை பள்ளிக்குச் செல்லும் முன்பு தான் ரம்பா ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், தற்போது தீவிர சிகிச்சையில் உள்ள குழந்தை சாஷா, ப்ரென்ச் பாடல் ஒன்றை தன் தாயின் தோள் மீது அணைத்த படி பாடிக் கொண்டிருந்தது. க்யூட்டாக அந்த குழந்தை பாட, அதை பிரமிப்பாக பார்த்து ரசித்தபடி பூரித்து போயிருந்தார் ரம்பா.
யார் கண் பட்டதோ, வீடியோ வெளியிட்ட 24 மணி நேரத்திற்கு முன்பே, அந்த குழந்தை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. பலருக்கும் உதவும் எண்ணம் கொண்ட ரம்பாவிற்கு இந்த நிலையா, என் பலரும் இச்சம்பவத்தால் கவலையடைந்துள்ளனர்.