உசிலம்பட்டி அருகே மீனாட்சிபுரம், சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஒச்சம்மாள் மற்றும் கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே என்.மீனாட்சிபுரம், என்.சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது கரிசல்குளம் வகையாறாவிற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த ஒச்சம்மாள் மற்றும் கருப்பசாமி திருக்கோவில். இந்த கோவிலில் புதிய கட்டமைப்பு மற்றும் 21 அடியில் ஒச்சம்மாள் சுவாமிக்கு கோபுரத்துடன் கூடிய கோவில் மற்றும் கருப்பசாமிக்கு தனிப்பீடத்துடன் கூடிய கோவில் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கணபதி யாக பூஜையுடன் மூன்று கால யாக பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தி காலை 8 மணிக்கும் கடம் புறப்பாடாகி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.


பொதுமக்கள் சாமி தரிசனம்


கும்பாபிஷேகம் முடித்ததும் மாபெரும் அன்னதானம் விழாக் கமிட்டியினரால் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் மீனாட்சிபுரம், சொக்கநாதபுரம், மூப்பபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள இந்த வகையாறாவிற்கு பாத்தியப்பட்ட மக்களும்,  நல்லுத்தேவன்பட்டி, லிங்கநாயக்கன்பட்டி மற்றும் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


நினைத்ததை நிறைவேற்றும் கிராம தெய்வங்கள்


இதுகுறித்து உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில் கூறுகையில், “எங்கள் பகுதியில் கிராம சிறு தெய்வங்களை வழிபடும் பழக்கம் முன்னோடியானது. எந்த ஒரு நல்ல காரியங்களையும் செய்யும் முன் குல தெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலை துவங்குவோம். கிராம தெய்வங்கள் நினைத்ததை நிறைவேற்றும் என்பதலால் மக்கள் பய பக்தியுடன் வேண்டிக் கொள்வார்கள். கரிசல்குளம் வகையாறாவிற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த ஒச்சம்மாள் மற்றும் கருப்பசாமி திருக்கோவில். இந்த கோவிலில் புதிய கட்டமைப்பு மற்றும் 21 அடியில் ஒச்சம்மாள் சுவாமிக்கு கோபுரத்துடன் கூடிய கோவில் மற்றும் கருப்பசாமிக்கு தனிப்பீடத்துடன் கூடிய கோவில் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Tirupattur Inscription: வரலாற்றில் திருப்பத்தூர் கல்வெட்டும் கோவில், கலாச்சாரத்தை தாங்கி நிற்கிறது - அதன் பெருமை அறிவோம்..!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Lok Sabha Election: "பா.ஜ.க.வின் பம்மாத்து வேலை இனி மக்களிடம் எடுபடாது" - தி.மு.க. பரபரப்பு அறிக்கை