வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி மாத நிறைவு வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாருக்கு 51 ஆயிரம் கண்ணாடி வண்ண வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள்  நடத்தப்பட்டது.




கருவறையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேதர ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வரலட்சுமி பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு கடந்த வாரம் அம்மனுக்கு ஆடை அலங்காரம் செய்யப்பட்டிருந்த தாலிக்கயிறுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பெண் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பத்மாவதி தாயாரை  தரிசனம் செய்தனர்.


SSLV D3: வெற்றி! வெற்றி! விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி. - டி3 ராக்கெட்!


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேதர சீனிவாச பெருமாள் திருக்கோயில். சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோயில் போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலைத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.




இன்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கருவறையின் அருகில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு  சுமார் 51 ஆயிரம் வண்ண கண்ணாடி வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆலயப் பிரகாரம் முழுவதும் வண்ண கண்ணாடி வளையல்களால் தோரணம் அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


Breaking News LIVE, AUG 16: கட்சி விதிகளில் மாற்றமா? தொடங்கியது அதிமுக அவரசர செயற்குழு கூட்டம்


கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு உற்சவருக்கு வெள்ளிக் கவசங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவராக வீற்றிருக்கும் பத்மாவதி தாயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பெண் பக்தர்கள் இந்த வரலட்சுமி நோன்பில் பங்கேற்று தங்கள் குடும்பம் சிறக்கவும் சுபிட்சங்கள் பெறவும் பத்மாவதி தாயார் வேண்டி வழிபட்டனர்.




கடந்த வாரம் 10 ஆயிரத்து ஒரு தாலிக்கயிறுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த தாலி கயிறுகள் வரலட்சுமி நோன்பில் பங்கேற்ற பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பத்மாவதி தாயார் புகைப்படம் திருமாங்கல்யம் வளையல், போன்றவைகள் அடங்கிய தாம்பூலப்பை பிரசாதமாக வழங்கப்பட்டது.