Breaking News LIVE : ‘THE GOAT' படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில், சிப்காட் நிறுவனம் மூலம் ₹700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். 20 ஏக்கர் பரப்பில் 18,720 பேர் தங்கும் வகையில் 13 தொகுதிகளாக 10 மாடிகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘THE GOAT' படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்தது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் உயரதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பு
பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது வென்ற 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்காளதேச இடைக்கால அரசுத் தலைவர் முஹம்மது யூனுஸிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை குறித்தும், ஜனநாயக,அமைதியான மற்றும் எதிர்கால வங்காளதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு குறித்தும் பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும், வங்காள தேசத்தில் உள்ள இந்துக்கள், சிறுபான்மையினர்களின் பாதுகாப்புக்கு வங்காள தேச தலைவர் யூனுஸ் உறுதியளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு நடைபெற்று வருகிறது. சுறா மீன், பாண்டா கரடி, கொரில்லா குரங்கு உள்பட பல்வேறு உருவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட காற்றாடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1
சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எப் 2
சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளைக்கா
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடனம் - ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா
சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (காந்தாரா)
திருச்சிற்றம்பலம் படம் : சிறந்த நடிகைக்கான விருது பெறுகிறார் நித்யா மேனன். சிறந்த நடன இயக்கத்துக்கான விருது பெறுகிறார் ஜானி மாஸ்டர்
கொல்கத்தாவில் நடந்த பெண் ரெசிடென்ட் கொலை தொடர்பாக 17.4. 2024 அன்று காலை 6:00 மணியிலிருந்து 24 மணி நேரம் நாடு தழுவிய டோட்டல் ஸ்ட்ரைக் போராட்டத்தை இந்திய மருத்துவ கழகம் (IMA) அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் (TNGDA ) பங்கேற இருப்பதாக அறிவித்துள்ளனர்.
கொல்கட்டா பெண் மருத்துவர் கொலையில் நேர்மையான விசாரணை மற்றும் நியாயம் கிடைக்க வேண்டும், -தேசிய மருத்துவர் மட்டும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க (TNGDA)த்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் நலன் கருதி மின் கட்டண உயர்வை ரத்து செய்திடவும் மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்தவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றத் தவறியதாகவும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த பல திட்டங்களை முடக்கியது, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காதது, இலவச வேட்டி சேலை மற்றும் இலவச பள்ளி சீருடை வழங்குவதில் மெத்தனப்போக்கு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை திமுக அரசு வழங்கவில்லை. இலவச வேட்டி சேலை, வழங்குவதிலும், இலவச பள்ளி சீருடைகள் வழங்குவதிலும் திமுக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது எனக்கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியிட அனுமதி கொடுத்தற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், இரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்துக் கொள்வதையும் பாரபட்சம் காட்டுவதையும் வழக்கமாக வைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சாதரண கட்டணம் ரூ.5000 ப்ரீமியம் இருக்கைகளுக்கான கட்டணம் ரூ.7, 500 ஆக நிரணயிக்கப்பட்டுள்ளது.
தி.மு.கழகத்தின் பவள விழா ஆண்டினை கொண்டாடும் வகையில் சென்னையில் எழுச்சிமிகுந்த முப்பெரும் விழா நடத்த தீர்மானம் நிறைவேற்றபட்டது.
“பேரறிஞர் அண்ணாவால் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒவ்வொரு உடன்பிறப்பும் உள்ளன்புடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், செப்டம்பர் 17 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எழுச்சி மிகுந்த விழாவாகக் கொண்டாடப்படும். சென்னையில் முப்பெரும் விழா நடத்தப்படும். “ என்று தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்கள் நலத்திட்டங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாகவும் திறம்படச் செயலாற்றி, ‘நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தை முன்வைத்து, அதற்கேற்ப தேர்தல் களத்திற்கான வியூகத்தை அமைத்து, ஓய்வறியாமல் உழைத்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியின் நிலவரத்தையும் துல்லியமாகக் கண்காணித்து, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்குப் பெற்றுத் தந்ததுடன், ‘நாடும் நமதே’ என்ற முழக்கத்தால், பாசிச மதவாத அரசியலுக்கு எதிராக இந்தியா கூட்டணியைக் கட்டமைப்பதில் முனைப்புடன் செயலாற்றிய தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று நடைபெற்ற மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நம் தயாரிப்புகளை தயக்கம் இல்லாமல் நாம் மதிக்க வேண்டும். நேஷனல் ஜியோகிராபிக் சேனலுக்காக சத்குருவுடன் விவசாயிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே கருப்பு கவுனி மிக்ஸை சத்குருவிடம் கொடுத்தேன். அவர் தமிழகத்தில் இருந்து ஒரு விவசாயி கருப்பு கவுனியில் ஹெல்த் மிக்ஸ் செய்து இருக்கிறார் என்று அதை கைகளில் ஏந்தி பல முறை பேசினார்.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. கட்சி விதிகளில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் மொத்த தொகுதிகளில் அதிமுகவில் 82 மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 4 மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட செயலாலரும் சில இடங்களில் 2 மாவட்டங்களுக்கு ஒரு மாவட்டச் செயலாளரும் செயல்பட்டு வருகின்றனர். இதை பிரித்து 2 மாவட்டங்களுக்கு ஒரு செயலாளர் என்றே பிரிக்கலாம் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்கள் கட்சி உங்களுடன் உறுதியாக இருப்பதால், மக்கள் உங்களுக்கு சமமான உறுதியுடன் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள். மக்களுக்கு சேவை செய்வதில் உங்களின் அயராத அர்ப்பணிப்பை இந்த ஆண்டு மேலும் வலுப்படுத்தட்டும்.
500 கிலோ எடை வரை உள்ள சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கழக செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள், எம்.பி, எம்.ஏக்கள் கலந்து கொள்கின்றனர்.
மகாராஷ்ட்ரா, ஹரியானா, ஜம்மு - காஷ்மீருக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
Background
- நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 2025ம் ஆண்டு ஜனவரிக்குள் 75 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- குரங்கு அம்மைக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
- அத்திக்கடவு – அவினாசி நீர்ப்பாசன திட்டம் நாளை தொடக்கம் – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
- இன்று ஒரே நாளில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கூட்டங்கள்
- இன்று விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. செயற்கைக்கோள்
- புதுக்கோட்டையில் கருக்கலைப்பு விவகாரத்தில் பெண் உயிரிழப்பு – மருத்துவமனையில் இன்று ஆய்வு
- கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை; இந்தியா முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு மருத்துவ சங்கங்கள் அழைப்பு
- பெண் மருத்துவர் கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டை அளிக்க மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
- ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா மீது நிதி மோசடி புகார் – விசாரணையை தொடங்க உத்தரவு
- வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மொய் விருந்து – வத்தலகுண்டு, சாத்தூரில் பணத்தை வாரி வழங்கிய மக்கள்
- நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் ட்ரெயிலர் நாளை ரிலீஸ்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -