தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தெருக்களில் ஆடியவாறு தீச்சட்டி எடுத்தும், காவடி எடுத்தும் பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் உற்சாக வழிபாடு செய்தனர்.


Ungalil Oruvan CM Stalin : ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை.. உங்களில் ஒருவன் கேள்விக்கு முதலமைச்சர் பதில்!


தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பகவதி அம்மன் கோவில் மாசி மாதம் நடைபெறும். 3 நாட்கள் திருவிழா நேற்று பெண்கள் கரகம் எடுத்து இரவு முழுவதும் வீதி உலா சென்று திருவிழா தொடங்கியது.


Rohit Sharma: கவாஸ்கரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோகித்.. கேப்டனாக அடுத்த உயரம் செல்வாரா..


இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான பாரம்பரிய மிக்க ஆடலுடன் வெறுங்கையால்  தீச்சட்டி எடுத்து பெரியகுளத்தில் வடகரை பகுதிகளின் முக்கிய வீதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆடியவாறு இளைஞர்கள் தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.


IND vs AUS 4th Test LIVE Score: ரன் வேட்டையில் ஆஸ்திரேலியா.. விக்கெட் எடுக்க தடுமாறும் இந்தியா..!


இதில் 25 பக்தர்கள் குழுவாக கைகளில் தீச்சட்டி ஏந்தி தெருக்களில் ஆடியவாறே நகர் வலம் வந்தனர். சுமார் 5 கிலோ மீட்டர் துரம் இவ்வாறு தீ சட்டியுடன் ஆடியவாறு பகவதி அம்மன் கோவிலில் வந்து சுவாமி தரிசனம் செய்து தங்களின் நேர்த்திகடனை அவர்கள் செலுத்தினார்கள். மேலும் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து பகவதி அம்மன் கோவில் வழிபட்டு சென்றனர்.




திருவிழாவின் போது தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை ஆகிய தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பகவதி அம்மன் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவிற்காக 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண