பார்டர்-கவாஸ்கர் டிராபியின் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகிறது. ஏற்கனவே நடந்த முதல் மூன்று போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திட மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில், முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கரின் மிகப்பெரிய சாதனை ஒன்றை தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா உடைக்க இருக்கிறார். ஒரு கேப்டனாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கர் படைத்துள்ளார். கேப்டனாக இரண்டு சதம் அடித்து சுனி கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார். இன்று நடைப்பெறும் அகமதாபாத் டெஸ்டில் ரோகித் மேலும் ஒரு சதம் அடித்தால் இந்திய கேப்டனாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் அதிக சதம் அடித்த சுனில் கவாஸ்கரை சமன் செய்வார்.
ரோகித் சர்மாவை தவிர்த்து முன்னாள் இந்திய கேப்டன்களான மகேந்திர சிங் தோனி, மன்சூர் அலிகான் பட்டோடி இந்த பட்டியலில் உள்ளனர்.
சொந்த மண்ணில் கேப்டனாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்த இந்திய வீரர்:
- சுனில் கவாஸ்கர் - 2
- ரோகித் சர்மா-1
- எம்.எஸ். தோனி -1
- மன்சூர் அலிகான் பட்டோடி-1
- முகமது அசாருதீன் - 1
- கபில்தேவ் -1
எம்.எஸ். தோனி:
ஒரு கேப்டனாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் உள்ளார். தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 8 போட்டிகளில் 66.30 சராசரியுடன் 643 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதம் அடங்கும்.
இவருக்கு அடுத்தபடியாக மன்சூர் அலிகான் பட்டோடி 490 ரன்களுடனும், சுனில் கவாஸ்கர் 425 ரன்களுடன் உள்ளனர். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 207 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
அகமதாபாத் டெஸ்டில் தோனியின் இந்த சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பது கடினம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள்:
- எம்.எஸ்.தோனி - 643
- மன்சூர் அலிகான் பட்டோடி - 490
- சுனில் கவாஸ்கர் -425
- முகமது அசாருதீன் - 311
- ரோகித் சர்மா-207
இன்றைய கணிக்கப்பட்ட அணி விவரம்:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஆர் அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (WK), மிட்செல் ஸ்டார்க், மாட் குஹ்னெமன், நாதன் லியான், டாட் மர்பி.