IND vs AUS 4th Test LIVE Score: டிராவில் முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டி; 2 - 1 என தொடரை வென்ற இந்தியா..!
IND vs AUS 4th Test LIVE Score: டிராவில் முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டி; 2 - 1 என தொடரை வென்ற இந்தியா..!
IND vs AUS 4th Test LIVE Score: இந்திய- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்
நான்காவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 571 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 88 ரன்கள் பின்தங்கியுள்ளது.
161.3 ஓவர்களில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை சமன் செய்துள்ளது. இந்திய அணி தற்போது 5 விக்கெட்டுகளை இழந்து 480 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது.
IND vs AUS 4th Test LIVE Score: 360 ரன்களை கடந்த இந்திய அணி - விராட் கோலி சதமடிப்பாரா?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 88 ரன்கள் எடுத்துள்ளதால் சதமடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
IND vs AUS 4th Test LIVE Score: 300 ரன்களை கடந்தது இந்திய அணி
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது - இதில் நிதான ஆட்டம் வெளிப்படுத்தி வரும் இந்திய அணி 300 ரன்களை கடந்தது.
மதிய உணவுக்குப் பிறகான தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியைவிட 292 ரன்கள் பின்தங்கியுள்ளது.
IND vs AUS 4th Test LIVE Score: இந்திய அணி நிதான ஆட்டம் - சுப்மன் கில் சதமடிப்பாரா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி நிதான ஆட்டம் - சுப்மன் கில் அரைசம் கடந்துள்ள நிலையில் சதம் அடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்த இன்னிங்ஸின் முதல் சிக்ஸரை இந்திய அணியின் சுப்மன் கில் பறக்கவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் 11 பேர் களமிறங்கியும் ஒருவர் கூட சிக்ஸ் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்கள் சேர்த்து மிகவும் வலுவான நிலையில் உள்ளது. களத்தில் கவாஜா 180 ரன்களுடனும், நாதன் லைன் 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
300 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா.. விக்கெட் எடுக்க திணறும் இந்திய அணி..!
இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 300 ரன்களை குவித்து ஆபாரமாக ஆடி வருகிறது. இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்து இந்திய அணி ஒரு விக்கெட்களை கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பில், கவாஜா 229 பந்துகளில் 88 ரன்கள் குவித்து நிலையாக விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் மற்றும் கவஜா கூட்டணி 230 பந்துகளுக்கு மேல் சந்தித்து 70 ரன்களுக்கு மேல் சேர்த்து நிலைத்து நின்று ஆடி வருகின்றனர். இவர்களின் கூட்டணியை பிரிக்க இந்திய அணி வீரர்கள் என்ன செய்வது என தெரியாமல் இருந்தனர். யாருடைய பந்தும் எடுபாடத நிலையில் பகுதி நேர பந்து வீச்சாளராக ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச வந்துள்ளார்.
ஆஸ்திரேலியா 2 ஓவரில் 10 ரன்கள்.. இரண்டாவது ஓவர் மெய்டன்..!
ஆஸ்திரேலியா முதல் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. முதல் ஓவரில் அந்த அணி 10 ரன்கள் எடுத்தது. இதன் போது உஸ்மான் கவாஜா 4 ரன்கள் எடுத்தார். இரண்டாவது ஓவரை மெய்டனாக உமேஷ் யாதவ் வீசினார்.
டிராவிஸ் ஹெட், கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), லாபுஷாக்னே, சி கிரீன், பி ஹேண்ட்ஸ்கோம்ப், ஏ கேரி (விக்கெட் கீப்பர்), ஸ்டார்க், மர்பி, லியோன், குஹ்னெமன்.
கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்ட இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்கள்..!
4வது டெஸ்ட் போட்டியையொட்டி மைதானத்தில் நடந்த கலைநிகழ்ச்சிகளை இந்திய- ஆஸ்திரேலிய பிரதமர்கள் பார்வையிட்டனர்.
Background
இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மார்ச் 9ம் தேதி (இன்று) அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 வெற்றிகள், 1 தோல்வியுடன் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு டெஸ்ட் தோல்விக்கு பிறகு மீண்டெழுந்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை 3வது டெஸ்ட்டில் வீழ்த்தியது. இந்த சூழலில் அகமதாபாத்தில் இன்று தொடங்கும் கடைசி போட்டியின் முடிவை பொறுத்தே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா..? என்பது தெரியும்.
ஆடுகளம் எப்படி?
இந்த தொடர் முழுவதும் நடைபெற்ற போட்டிகள் அனைத்து ஆடுகளம் குறித்து இதுவரை பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. கடந்த மூன்று போட்டிகளில், நாக்பூர், டெல்லி, இந்தூரில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே பிட்ச் இருந்தது. இதேபோல், இன்று தொடங்கும் அகமதாபாத் டெஸ்ட் போட்டியிலும் சுழலுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சார் படேல் போன்ற உலகத் தரம் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அகமதாபாத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம்.
யார் யாருக்கு வாய்ப்பு..?
ரிஷப் பண்ட் இல்லாததால், இந்திய அணி விக்கெட் கீப்பருக்கான தேடலில் தவித்து வருகிறது. நாக்பூர் டெஸ்டில் அறிமுகமான கே.எஸ். பாரத் விக்கெட் கீப்பிங்லில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் பெரிதாக எந்தவொரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதையடுத்து, கே.எஸ். பாரத்திற்கு பதிலாக இந்திய அணி நிர்வாகம் இஷான் கிஷனை இந்த போட்டியில் களமிறக்கலாம்.
கடந்த போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் களமிறக்கப்பட்டு, விக்கெட்களையும் வீழ்த்தினார். ஆனால், இந்த தொடரில் முகமது சிராஜ் பெரியளவில் விக்கெட் வேட்டையில் ஈடுபடவில்லை. எனவே இந்த போட்டியில் சிராஜுக்கு பதிலாக ஷமி மீண்டும் இடம் பெற வாய்ப்புள்ளது.
பார்வையிடும் பிரதமர்கள்:
இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இன்று அகமதபாத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மைதானத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்டின் முதல் நாள் போட்டியை காண்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானம் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இங்கு இரண்டு போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.