மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அகர ஆதனூர் கிராமத்தில் அருள்மிகு புற்றடி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த  கோயிலின் 87 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு  கடந்த 5 -ஆம் தேதி பூச்சொரிதலுடன் காப்பு கட்டி விழா துவங்கியது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு கிராமவாசிகளால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. 




15 -ஆம்நாள் திருவிழாவான தீமிதி திருவிழாவை முன்னிட்டு பெரிய குளக்கரையிலிருந்து மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம்  புறப்பட்டு விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில்  சக்திகரகம் இறங்கியது. அதனைத் தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி, காப்பு கட்டி விரதம் இருந்த பெண் பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 


Minister Senthil Balaji :டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என அறிவுறுத்தவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்





20 -க்கும் மேற்பட்ட அளவு காவடி எடுத்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆனந்த நடனமாடி கோயிலை சுற்றி வந்தனர்.  பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.


Stray Dog: பூங்காவில் விளையாடிய 7 வயது சிறுவன்.. கடித்துக்குதறிய தெருநாய்.. பரிதாபமாக பறிபோன உயிர்..!


மற்றோரு தீமிதி திருவிழா 
மாமாகுடியில் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன்  கோயிலில் தீமிதி திருவிழா.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாமாகுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 10-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன்னுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. 


Twitter Update : எலான் மஸ்கின் அடுத்த அதிரடி.. வீடியோ இனி இப்படி பாக்கலாமா? அதிர்ச்சியில் யூடியூப், நெட்பிளிக்ஸ்..




இதனை முன்னிட்டு குளக்கரையில் இருந்து மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்  செலுத்தினர். மேலும் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


Amitabh Bachchan: என்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்க... ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன்... தொடரும் ஹெல்மெட் பஞ்சாயத்து!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண