Twitter Update : ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க், தனது சமூக வலைதள சேவையில் புதிய வசதியை அறிமுகம் செய்து இருக்கிறார்.


டிவிட்டரில் ஏற்பட்டு வரும் மாற்றம்


எலன் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து ட்விட்டர் ஏடாகூடமாக மாறி வருகிறது. ட்விட்டர் தளத்தின் அடிப்படையான தத்துவத்தில் பலவற்றையும் மாற்றி அதிர்ச்சி அளித்தார். காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை டுவீட் செய்யலாம் என்பது வரை, எல்லா அப்டேட்டுகளும் விமர்சனங்கள் பெற்றாலும், அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.


இதுமட்டுமின்றி, புதிய அம்சங்களைத் தவிர, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது. இது ட்விட்டரை சுத்தமாகவும் புதுப்பித்ததாகவும் வைத்திருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தது.


புதிய வசதி


இந்த வரிசையில் தற்போது புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, பயனர்கள் 2 மணி நேரத்திற்கு ஓடும் அல்லது 8 ஜிபி (8GB) வரையிலான அளவு கொண்ட வீடியோக்களை ட்விட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.  தற்போது இந்த அம்சம் ட்விட்டர் ஐஓஎஸ் (IOS) மட்டும் வழங்கப்பட்டுள்ளது.


ஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துவோர் பத்தி நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பவேற்றம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 60 நிமிடங்கள் வரை வீடியோ பதிவேற்ற வரம்பு இருந்து வந்த நிலையில் தற்போது 2 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் ப்ளு டிக் பயனர்கள் கிடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ட்விட்டர் புளூ சந்தாதாரர்கள் அதிக நேரம் ஓடும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய கம்போஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டிய வீடியோவை கிளிக் செய்ய வேண்டும். இனி ட்விட் செய்யக்கோரும் ஆப்ஷனை கிளிக் செய்தால், வீடியோ பதிவேற்றம் செய்யப்படும் ஆப்ஷனும் தோன்றும். ஒரு நாளில் எத்தனை வீடியோக்களை வேண்டுமானாலும் அப்லோடு செய்து கொள்ளலாம்.






ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ”அனைத்து ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு இப்போது 2 மணி நேர வீடியோக்களை ட்விட்டர் கணக்கில் பதிவேற்ற முடியும்" என்று தெரிவித்துள்ளார்.


அண்மையில் வந்த வசதி


ட்விட்டரின் சமீபத்திய பதிப்பின் மூலம், நீங்கள் போஸ்ட் த்ரெட்டில் உள்ள எல்லா செய்திக்கும் DM-இல் (மெசேஜில்) பதிலளிக்கலாம். மேலும் அதற்கு ரியாக்ஷன் செய்ய எந்த ஈமோஜியையும் பயன்படுத்தலாம். encrypted DM வசதி கொண்ட இந்த 1.0 வெர்ஷன் வெளியாகி இருக்கிறது. இது அதிவேகமாக அதிநவீனத்தில் வளரும்" என்று எலோன் மஸ்க் அண்மையில்  அறிவித்திருந்தார்.