தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் கோயில் திருவிழா கம்பத்திற்கு நீர் தண்ணீர் ஊற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான 600 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கிராம கோயிலான அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் கடந்த நான்காம் தேதி சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் விழாவுடன் ஆனிபெருந்திருவிழா துவங்கியது. இக்கோவில் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு நேற்று முதல் நாள் திருவிழாவான கௌமாரி அம்மனுக்கு கோவில் முன்பு உள்ள கம்பத்திற்கு நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று அதிகாலை 3 மணி முதல் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரும் அம்மனுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றியும், அங்க பிரதசனம் செய்தும் வழிபட்டனர்மேலும் பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு தண்ணீர் எடுத்து ஊத்தி சிறப்பு வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று 19ம் தேதி அருள்மிகு கௌமாரியம்மன் ஆனிபெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் ஆன அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
மேலும் பெரியகுளத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்