பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நிகழ்ச்சி 10ம் தேதியும், தைப்பூச தேரோட்டம் நிகழ்ச்சி 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருப்பரங்குன்றம் சரித்திரத்தை சொன்ன அண்ணாமலை... அடுக்கடுக்காக வைத்த கேள்வி
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக இருப்பது பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் முருக பெருமானிற்கு உகந்த நாட்களான சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி, மற்றும் வைகாசி விசாகம், சஷ்டி விரதம், தைப்பூசம், உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
தமிழ் கடவுள் என்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் வணங்கப்படுபவர் முருகன். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி சேர்ந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூசம் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வருகிறது. முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான நாட்களில் ஒன்று தைப்பூசம். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூச விழா மிகவும் விமர்சையாக நடைபெறும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும் காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். தைப்பூசம் அன்று விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். அதேபோல் முருகன் கோயிலுக்கு சென்று அபிஷேகங்கள் கண்டால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முகக் கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களை பாடினால் சிறப்பு.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தைப்பூச திருவிழாவிற்கான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் சேவல், மயில் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தேர்வர்களே.. பிப்.14 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்- பெறுவது எப்படி?
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி வரும் 10 ம் தேதியும், தைப்பூசத் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி 11 ஆம் தேதி மாலையும் நடைபெற உள்ளது. பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழாவிற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.