தேர்வர்களே.. பிப்.14 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்- பெறுவது எப்படி?

10th, 11th, 12th exam 2025 Hall ticket: தனித்தேர்வர்கள்‌ (தத்கல்‌ உட்பட) தங்களது தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை 14.02.2025 அன்று பிற்பகல்‌ முதல்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

Continues below advertisement

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு பிப்ரவரி 14 முதல் ஹால் டிக்கெட்டை (தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டு) இணையதளம்‌ மூலம் பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை பெறுவது எப்படி? காணலாம்.

Continues below advertisement

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இடைநிலை (பத்தாம்‌ வகுப்பு) , மேல்நிலை முதலாம்‌ ஆண்டு (பிளஸ் 1) மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு (பிளஸ் 2) பொதுத்‌ தேர்வுகள்‌, மார்ச்‌ / ஏப்ரல்‌- 2025 மாதங்களில் நடைபெற உள்ளன.

பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ (தத்கல்‌ உட்பட) தங்களது தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை 14.02.2025 அன்று பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

தனித்தேர்வர்கள்‌, www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ சென்று முதலில் "HALL TICKET" என்ற வாசகத்தினை 'க்ளிக்' செய்ய வேண்டும்.

அதில்‌ தோன்றும்‌ பக்கத்தில்‌ உள்ள "SSLC / HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MARCH/ APRIL- 2025 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் தோன்றும் விண்ணப்ப எண்‌ (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மேல்நிலை முதலாமாண்டு (+1 அரியர்) மற்றும்‌ இரண்டாமாண்டு (+2) பொதுத்‌ தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும்‌ சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும்‌ வழங்கப்படும்‌.

தேர்வு அட்டவணை என்ன?

மார்ச்‌ - 2025, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு / இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்‌. குறிப்பாக, https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1729853324.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். 

கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in

Continues below advertisement
Sponsored Links by Taboola