பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஐந்தாம் திருவிழாவான இன்று பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும், பக்தி பாடல்கள் பாடியபடி கிரிவல பாதையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.




Ayodhya Ram jewellery: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை! குழந்தை ராமர் அணிந்துள்ள நகைகள் என்னென்ன? மொத்த விபரம்!


அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். இந்நிலையில் தைப்பூசத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Minister Udhayanidhi Stalin: முயல் - ஆமை கதையாகிவிடும்; இதை மட்டும் செய்யாதீங்க! நம் இலக்கு இதுதான்! - திமுகவினருக்கு உதயநிதி வைத்த கோரிக்கை..




10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நாளை ஆறாம் திருவிழாவில் முத்துக்குமாரசாமி , வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவமும் , அதனைத் தொடர்ந்து 25ஆம் தேதி ஏழாம் நாளான அன்று பூச நட்சத்திரத்தில் தைப்பூச திருவிழாவில் அன்று மாலை தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை ஆக பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.  


9 சட்டமன்ற தொகுதியில் 22,91,890 வாக்காளர்கள்! திருச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!


இந்நிலையில், இன்று ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் காவடிகள் எடுத்தும் அழகு குத்தியும் முருகன் பக்தி பாடலை பாடியும், கிரிவலப் பாதையில் குவிந்து வருகின்றனர். குடிநீர், கழிவறை, தங்குமிடம், மருத்துவ வசதி உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் காவல்துறை சார்பில் 3000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.


டேட்டிங்க் ஆப்பில் மீட்டிங்! காரைக்குடி பெண்ணை கல்யாணம் செய்த நியூயார்க் மணமகன்! - பின்னணி என்ன?