மாக்கோலம் , மாவிலை தோரணம், அரசனிக்கால் மணவறை , நாதஸ்வர கெட்டிமேளம் முழங்க பாரம்பரிய செட்டிநாட்டு சடங்குகளுடன் அமெரிக்க மாப்பிள்ளையை கரம் பிடித்த  காரைக்குடி மணமகள்.

 

ஒரேவண்ண பாரம்பரிய உடையில் பாரம்பரிய பங்களாவில் வலம் வந்து மணமக்களை வாழ்த்திய அமெரிக்க தம்பதிகள், நண்பர்கள்  உற்சாகம்.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த முத்துப்பட்டனம் சிதம்பரம்  - மீனாள்  தம்பதியின் மகள் பிரியா அமெரிக்காவில் உள்ள நீயூயார்க்  நகரத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள பிரபல மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் டேட்டிங் ஆப் மூலம் மைக்கேல் ஏஞ்சல் தம்பதியின் மகன் சாம் (SAM) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் இருவரும்  காதலித்துள்ளனர்.

 



 

காதல் குறித்து பிரியா தனது குடும்பத்தில் தெரிவித்து சம்மதம் பெற்ற நிலையில், பிரியா தமிழ் கலாச்சார பாரம்பரிய முறைப்படி  பிறந்த ஊரில் திருமணம் செய்ய முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் செட்டிநாட்டு நகரத்தார் பாரம்பரிய முறைப்படி  மாக்கோலம், மாவிலை தோரணம், அரசனிக்கால் மணவறை நாதஸ்வர இசையில் கெட்டிமேளம் முழங்க காரைக்குடியில் பிறந்து வளர்ந்த வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.



 

இந்த திருமணம் குறித்து மணமகள் பிரியா கூறும் போது பிறந்த ஊரில் திருமணம் செய்து கொள்வது மகிழ்சியளிக்கிறது என்றார். இந்த தமிழ் கலாச்சார திருமணத்தில் பாரம்பரிய உடையில் பங்கேற்றது ஒரு வித்தியாசமான தாக உள்ளது. இது மிக மகிழ்ச்சியான, தருணம் என்று மணமகன் உற்சாகத்துடன் கூறினர்.