மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  அடுத்து திருமுல்லைவாசலில் பழமையான ஸ்ரீ மந்தக்கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ ஏழைக்காத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலின் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆண்டுத்திருவிழா  கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.




இவ்வாண்டு இந்த கோயிலின் திருவிழா கடந்த ஜுலை 16 ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, முளைப்பாரிகளுக்கு தேவையான நவதானியங்கள் கடந்த ஜூலை 18 -ம் தேதி கோயில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை பக்தியுடன்  பெற்று கொண்ட பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று ஒரு வார காலம் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தார். தொடர்ந்து நேற்று செவ்வாய் இரவு திருமுல்லைவாசல் கடற்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்துவரப்பட்டது. 


Ranil Wickremesinghe: 'இனி அதிமேதகு வேண்டாம்.! நாட்டு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க உரை.! பிரதமராகிறார் பிரேமதாச.!




அதனையடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட  முளைப்பாரிக்கு சிறப்பு படையலிட்டு பக்தர்கள்  மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாட்டத்துடன், சக்தி முன் செல்ல தலையில் சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து பெண்கள் ஆண் என கும்மியடித்து குலவை இட்டு வழிபாடு செய்தனர்.


Devar Jayanti : 'யாருக்கும் ஆதரவு கிடையாது..! தங்க கவசத்த நானே எடுத்து வந்து வச்சிருவேன்' - 'ஷாக்' தேவர் நினைவிட பொறுப்பாளர்




இன்று  புதன் மாலை கோயிலில் இருந்து பெரிய கரகத்தைஎடுத்து செல்ல, தொடர்ந்து விரதமிருந்த 500 -க்கும் மேற்பட்ட ஆண், பெண் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு திருமுல்லைவாசல்  கடற்கரைக்கு சென்று, அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர் பெண்கள்  அனைவரும் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்