இந்தியாவின் கலை, பண்பாட்டு, ஆன்மீக சுற்றுலா தலங்களை தரிசிக்க இந்திய ரயில்வே பாரத் கௌரவ் ரயில்களை இயக்கி வருகிறது. இந்த திட்டத்தின் படி மதுரையிலிருந்து பண்டரிபுரம், ஷீரடி, மந்த்ராலயம் ஆகிய ஆன்மீக தலங்களுக்கு டிசம்பர் மாதம் சுற்றுலா ரயில் இயக்கப்பட இருக்கிறது.



அதன்படி மதுரையிலிருந்து டிசம்பர் 24 அன்று புறப்படும் சுற்றுலா ரயில் திண்டுக்கல், திருச்சி,  விழுப்புரம்,  சென்னை வழியாக முதலில் பண்டரிபுரம் செல்கிறது. டிசம்பர் 25 அன்று பண்டரிபுரம் பாண்டுரங்கன் தரிசனம், டிசம்பர் 27 அன்று ஷீரடி சாய்பாபா தரிசனம், டிசம்பர் 29 அன்று மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனம் முடித்து டிசம்பர் 29 அன்று சுற்றுலா ரயில் மதுரை வந்து சேருகிறது.

 

 





ரயில் பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து போன்றவை உள்ளடக்கி குறைந்த கட்டணத்தில் இந்த சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலுக்கான பயண சீட்டுகளை  www.ularail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்”. - என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது