மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள லட்சுமி சுந்தரம் மகாலில் நடைபெறும் தமிழ் நாடகத் தந்தை என்றழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழாவில் நடைபெற்று வருகிறது. இதில் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கலை பண்பாட்டுத்துறை தலைவர் வாகை சந்திரசேகர் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சியின் மேயர் இந்திராணி பொன் வசந்த், எம்.எல்.ஏக்கள் தளபதி, பூமிநாதன், உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.



 

விழாவில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கலையையும், கலைஞர்களையும் ஊக்குவிக்க முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். நாடகக் கலை மிகவும் சிறப்பு வாய்ந்த கலை, அதில் சினிமாவை போல ரீ டேக் எல்லாம் எடுக்க முடியாது. நாடகக் கலை சிறப்பாக வளர வேண்டும் சங்கரதாஸ் சுவாமிகளின் புகழ் பரவ வேண்டும். நம் மொழி முக்கியமான அம்சங்களை கொண்டது. அதன் பிறகு நமது கலைகள் பாரம்பரியமும், பழமையும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.



 

தொடர்ந்து பேசிய வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, “30 ஆண்டுகளுக்கு முன்பாக நாடகம் என்பது  சீரும் சிறப்புமாக இருந்தது.  அரசியல் தலைவர்களை உருவாக்கும் முதல் பொருளாக மூலப் பொருளாக நாடகங்கள் சங்கரதாஸ் சுவாமிகள் இருந்தார். கிராமங்களில் எந்தத் திருவிழாவாக இருந்தாலும் இரண்டு தினம் திருவிழாக்கள் நடைபெறும். தற்போது நடைபெற்றுக் கொண்டுத்தான் இருக்கிறது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் நாடகங்களில் நடித்து பின் திரைத்துறை சென்று அரசியலில் வந்து வரலாறு படைத்து இருக்கிறார்கள் என்பது வரலாறு. 36க்கு மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கி இருக்கிறார்  சங்கரதாஸ் சுவாமிகள். வள்ளித் திருமணம் நாடகத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டினர். நாடகம் பார்க்க  போர்வை, சாக்குகளை எடுத்து செல்வர். வள்ளி திருமணம் நாடகம் கிராமங்களில் பேசப்படும் வரலாறாகவே இருந்தது. இன்று சினிமாத்துறை, தொழில்நுட்ப வளர்ந்து இருந்தாலும் கிராமங்களில் நாடகங்களுக்கு வரவேற்பு குறையவில்லை. பழம்பெரும் நாடகக் கலை எந்த காலத்திலும் அழியாத கலையாக நிலைத்திருக்கும்” என்றார்.

 



மதுரையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் நடிகர் வாகை சந்திரசேகர் பேச்சு, ” தமிழை நாடகங்கள் மூலம் எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். தமிழ்நாட்டு கலைஞர்களுக்கு என்னனென்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய ஆணையிட்டுள்ளார் முதல்வர். கலைஞரின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். வாழ்வு மலரும். முதல்வர் நல்லதை செய்வார்” என்றார்.

 



 











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்