தமிழக, கேரள  இரு மாநில எல்லையில், தேனி மாவட்டம் கூடலூர் பளியன் குடியிருப்பு பகுதியின் மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இது மதுரையை எரித்த கண்ணகி சினம் தணிந்து வானுறை சென்ற இடமாக சிறப்பு பெற்றது என்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி திருவிழா தமிழக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


12-hour Work Bill: 12 மணிநேர வேலை மசோதா அதிகாரப்பூர்வ வாபஸ்..



அதன்படி இந்த ஆண்டு நாளை காலை 6 மணிக்கு சித்ரா பவுர்ணமி முழுநிலவு விழா தொடங்குகிறது. விழாவில் கலந்துகொள்ள கண்ணகி கோவிலுக்கு செல்லும் தமிழக பக்தர்கள் பளியன் குடியிருப்பு பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக 6 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். தற்போது அந்த பாதையை வனத்துறையினர் சீரமைத்துள்ளனர். விழாவில் முதல் நிகழ்ச்சியாக பள்ளி உணர்த்துதலும், அதன்பிறகு மலர் வழிபாடு, மங்கல இசை, பொங்கல் வைத்தல், அவல் பிரசாதம் வழங்குதல், பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.


Murasoli: திமுக கூட்டணி கட்சியான சி.பி.எம். குறித்து முரசொலி விமர்சனம் - டி.கே.ரங்கராஜன் கருத்துக்கு எதிர்ப்பு!



மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், அம்மனுக்கு பூஜையில் வைக்கப்பட்ட மங்கல நாண் வளையல்களை பெண் பக்தர்களுக்கு வழங்குதல், நாட்டுப்புற பாடல்கள் பாடி வழிபாடு நடத்துதல் மற்றும் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.


‘பாஜகவின் அடிமையாக செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி’ திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி..!




விழாவின் நிறைவாக பூமாரி விழா நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு நாளை காலை முதல் மாலை வரை கம்பம் நகரில் இருந்து குமுளி மற்றும் பளியன்குடி வரை அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வாகனத்தில் செல்லவிரும்புபவர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு ஜீப்பில் செல்லலாம். இதற்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண