இந்த சூரிய கிரகணம் 1 மணிநேரம் மட்டுமே நீடிப்பதால் இது பகுதி நேர சூரிய கிரகணம் என்றும் கூறப்படுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாளே சூரிய கிரகணம் வருகிறது. பொதுவாகவே கிரகணத்தன்று சில விஷயங்களை செய்யக்கூடாது என்று பெரும்பாலானவர்கள் பின்பற்றுவார்கள். அவை என்னென்ன, என்ன நம்பிக்கைகள் என்று பார்க்கலாம்.


குறிப்பாக கர்ப்பிணி வீட்டில் இருந்தால் கிரகணம் ஏற்படுகிற நேரத்தில் வெளிச்சம் புகாத அறையில் இருக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள்.


ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது.


சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரியனை நிலவு மறைப்பதால் சூரிய கிரகணம் நிகழ்கிறது. உலக அளவில் பிற்பகல் 2.19 க்குத் தொடங்கி, 6.32 வரை சூரிய கிரகணம் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


சூரிய கிரகணத்தன்று என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று பார்க்கலாம்:


பொதுவாக சூரிய கிரகண நேரத்தில் வெளியில் செல்லக் கூடாது மற்றும் எதுவும் சாப்பிடக்கூடாது என்று நம்பப்படுகிறது. 


எனவே சூரிய கிரகண நேரத்தில் யாராக இருந்தாலுமே வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. கிரகண நேரத்தில் குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் வெளியில் செல்லக் கூடாது என்றும் நம்பப்படுகிறது.


கிரகணம் முடிந்த பிறகு வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டில் இருக்கும் அனைவருமே குளிக்க வேண்டும்.


Solar Eclipse: இந்தியாவில் இருந்து கிரகணத்தை எப்போது பார்க்க வேண்டும் தெரியுமா?


கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட்டுவிட வேண்டும் என்றும் கிரகணத்துக்கு முன்பாக சமைத்த உணவுகளை கிரகணத்திற்கு பிறகு சாப்பிட வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. 


கிரகணத்தைப் பார்க்க வேண்டும் என்று பலரும் விரும்புவோம். ஆனால் நாம் சூரியனை சாதாரணமாக பார்ப்பது போல கிரகணத்தைப் பார்க்கக் கூடாது. அவ்வாறு பார்க்கும் பொழுது பார்வை கோளாறு ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே, கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என நம்பப்படுகிறது. கிரகணத்தின் போது ஹெட்லைட்களை ஒளிர விட்டு உங்களது வாகனத்தை இயக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சூரிய கிரகணத்தை உங்கள் கேமராவை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்யக்கூடாது.


அடுத்த சூரிய கிரகணம் எப்போது?


இந்தியாவில் அடுத்த சூரிய கிரகணம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முழு சூரிய கிரகணமாக இருக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இது பகுதி சூரிய கிரகணமாகப் பார்க்கப்படும்.


ரஷ்யாவின் தெற்குப் பகுதி, கஜகஸ்தான், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தைக் காண முடியும். அக்டோபர் 25 அன்று பல இந்திய நகரங்களில் ஒரு பகுதி சூரிய கிரகணம் தெரியும். சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் தொடங்கும்.