நாளை நிகழும் சூரிய கிரகணத்தின்போது, தமிழகத்தில் மாலை நேரத்தில் 8 சதவீதப் பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாக காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரியனை நிலவு மறைப்பதால் சூரிய கிரகணம் நிகழ்கிறது. உலக அளவில் பிற்பகல் 2.19 க்குத் தொடங்கி, 6.32 வரை சூரிய கிரகணம் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் தெற்குப் பகுதி, கஜகஸ்தான், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தைக் காண முடியும். அக்டோபர் 25 அன்று பல இந்திய நகரங்களில் ஒரு பகுதி சூரிய கிரகணம் தெரியும். சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் தொடங்கும்.
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் தெரியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் கண்களால் சூரிய கிரகணத்தைப் பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், புது தில்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், வாரணாசி, மதுரா, புனே, சூரத், கான்பூர், விசாகப்பட்டினம், பாட்னா, ஊட்டி, சண்டிகர் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பகுதி சூரிய கிரகணம் தெரியும்.
புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, "சூரிய கிரகணம் இந்தியாவில் சூரிய அஸ்தமனத்திற்கு முன், பிற்பகலில் தொடங்கும். இருப்பினும், சூரிய கிரகணத்தின் முடிவை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகண சுதக் நேரம்
அக்டோபர் 25 ஆம் தேதி நிகழும் பகுதி சூரிய கிரகணம் இந்த ஆண்டில் காணக் கூடிய கடைசி சூரிய கிரகணமாகும். சூரிய கிரகண சுதக் நேரம், த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, அதிகாலை 03:16 மணிக்கு தொடங்கி மாலை 05:42 மணிக்கு முடிவடையும். இது பொதுவாக சூரிய கிரகணத்திற்கு சுமார் 12 மணி நேரத்திற்கு முன் அனுசரிக்கப்படுகிறது.
இந்து நம்பிக்கைகள் மற்றும் மரபுகளின்படி, சூரிய கிரகணத்திற்கு முன் சூரிய கிரகண சுதக் நேரம் எனஅபது அசுபமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று கருதப்படுகிறது.