நவக்கிரகங்களில் பொதுவாக சனி பகவான் என்றாலே ஒருவரை தண்டிக்கும் சனி பீடை என்றே நம்பப்படுகிறது. ஒருவருக்கு சனி பிடித்தால் பாடாய்படுத்துவார் என்றும் பல்வேறு சிரமங்களை கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இங்கு கூறப்படுவதாவது.. சனி பகவான் நல்ல யோகத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும்போது அவர் பல்வேறு வெற்றிகளை அடைவார் என்றும், நல்ல நிலைக்கு செல்வார் என்றும்  நம்பப்படுகிறது. சனிபகவான் அனைவரையும் தண்டிக்கவில்லை என்றும் சனி திசை அல்லது ஏழரை சனியின் காலத்தில் படும் கஷ்டமானது அவரது முன் வினை கர்மாவின் அடிப்படையே கொண்டே அமைகிறது என்று கூறப்படுகிறது.


CM Stalin: தென்மாவட்டங்களில் பெருவெள்ளம், தத்தளிக்கும் தூத்துக்குடி..! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு




தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்திபெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும் கோயிலில் சனீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே இடமாக குச்சனூர் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலில்  ஆண்டுதோறும் சனி பகவானுக்கு கொண்டாடப்படும் பல்வேறு வகையான திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அப்படி நடக்கும் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது தோஷங்கள் நீங்க நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்து வருகிறார்கள்.


Corona New Cases: மீண்டும் தலைவிரித்தாடும் கொரோனா அச்சம்.. கேரளாவில் மட்டும் 300 பேருக்கு தொற்று, தமிழ்நாட்டில் என்ன நிலை?




இந்த நிலையில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் சனிப்பெயர்ச்சி திருவிழாவினை முன்னிட்டு இலட்சார்ச்சனை ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பரிகார பூஜைகளை நிவர்த்தி செய்தார்கள். சனீஸ்வர பகவான் எழுந்தருளியுள்ள இத்திருக்கோவிலில்  நேற்று சனி பெயர்ச்சி தினத்தினை முன்னிட்டு சனீஸ்வர பகவான் சுத்த வாக்கிய பஞ்சாங்க முறைப்படி அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் தன் சொந்த வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சித்தார். அதனை முன்னிட்டு லட்சார்ச்சனை கோமா நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினார்கள்.


Mari Selvaraj: ‘வீட்டை சுற்றி வெள்ளம்.. இறந்தவரை இங்கேயே புதைச்சுட்டோம்’ - மாரி செல்வராஜை அதிர வைத்த நபர்




அதனைத் தொடர்ந்து பூஜை தீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.  மேலும் விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் பரிகாரங்களை செய்து இறை வழிபாடுகளை நடத்தி தங்களின் ராசிக்கான பரிகார பூஜைகளை செய்து வழிபட்டனர்.